கைதிகளுக்கு ஆடைகளை வழங்கிய கஸ்தூரி

தமிழகம்

தனது ஆடைகளை சிறை கைதிகளுக்கு வழங்கிவிட்டு வந்துள்ளார் நடிகை கஸ்தூரி.

தெலுங்கர்கள் குறித்து சர்ச்சையாக பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்த நடிகை கஸ்தூரி ஹைதராபாத்தில் வைத்து கடந்த நவம்பர் 16ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

சென்னை அழைத்து வரப்பட்டு புழல் சிறையில் பெண் கைதிகள் அடைக்கப்படும் சிறை 3ல் அடைக்கப்பட்டார். இந்த சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகளுக்கு என்று 5 பகுதிகள் உள்ளன.

பிரபலமான நடிகை என்பதாலும், வழக்கறிஞர் என்பதாலும், வருமான வரி செலுத்துபவராக இருப்பதாலும் கஸ்தூரிக்கு விசாரணை கைதிகள் பகுதியில் உள்ள முதல் வகுப்பு அறை ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில் காவல்நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் கஸ்தூரிக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் நேற்று முன் தினம் (நவம்பர் 20) மாலை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

ஜாமீன் கிடைத்த போதிலும், உடனடியாக இரண்டு பேர் சூரிட்டி கொடுக்க முடியாததால், மறு நாளான நேற்று சூரிட்டி கொடுத்து சிறையில் இருந்து வெளியே வந்தார்.

கஸ்தூரியை அவரது ஆதரவாளர்கள் “மக்கள் தலைவி கஸ்தூரி வாழ்க” என்று முழக்கமிட்டு சால்வை அணிவித்து வரவேற்றனர்.

அப்போது, “சிறு குரலாக இருந்த என்னை, சீறும் புயலாக மாற்றிய அனைவருக்கும் நன்றி” என்று பேட்டியளித்தார்.

இதற்கிடையே கஸ்தூரி சிறைக்கு போகும்போது, அவருக்கு தேவையான புடவை, நைட்டி, சுடிதார், உள்ளாடைகள் உள்ளிட்ட உடைகளை எடுத்துச் சென்றார்.

பொதுவாக சிறை விதிப்படி, தண்டனை கைதிகளுக்கு வெளியில் இருந்து ஆடைகள் கொடுக்கவோ, எடுத்துச் செல்லவோ அனுமதி இல்லை. விசாரணை கைதிகள் மட்டும்தான் ஆடைகளை உள்ளே எடுத்துச் செல்லலாம்.

அப்படிதான் கஸ்தூரியும் தனக்கு தேவையான உடைகளை உள்ளே எடுத்துச் சென்றார்.

சிறையில் 5 நாட்கள் கஸ்தூரி இருந்த போது அவருக்கு சில பெண் கைதிகள் உதவி செய்திருக்கிறார்கள்.

இந்நிலையில் நேற்று சிறையில் இருந்து வெளியே வருவதற்கு முன்பு, சில கைதிகளுக்கு தான் சிறைக்குள் பயன்படுத்திய புடவை, நைட்டி உள்ளிட்ட உடைகளை வழங்கிவிட்டு, உடுத்திய உடையுடன்  வெளியில் வந்தார் கஸ்தூரி என்கிறார்கள் அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

கூட்டணி இல்லாமல் ஆட்சிக்கு வரமுடியாது : கே.பாலகிருஷ்ணன் பேட்டி!

குடியரசுத் தலைவரை வரவேற்க செந்தில் பாலாஜியை அனுப்பலாமா? ஸ்டாலின் நடத்தும் ஆலோசனை!

 

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0