நடிகர் விஜய் பனையூரில் உள்ள தனது அலுவலகத்தில் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் இன்று (நவம்பர் 20) ஆலோசனை நடத்த உள்ளார்.
ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் விஜய் தனது ரசிகர்களை சந்திப்பதால் அவர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
நாமக்கல், புதுக்கோட்டை, சேலம், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் பனையூரில் உள்ள அலுவலகத்திற்கு வந்துள்ளனர்.
ரசிகர்களுடைய புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, ஆதார் கார்டு காண்பித்த பிறகு அவர்கள் அலுவலகத்திற்கு உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள். செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விஜய் ரசிகர்கள் கூறும்போது, “மாவட்டங்களில் உள்ள முக்கியமான நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி, தளபதியை காண வந்துள்ளோம். நேரில் வாங்க பேசிக்கலாம் என்று மட்டும் தான் கூறினார்கள். எதற்கான கூட்டம் என்று தெரிவிக்கவில்லை. தளபதி எங்களுடன் புகைப்படம் எடுத்தால் மகிழ்ச்சி அடைவோம்.” என்று தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளையும் நடிகர் விஜய் தனித்தனியாகச் சந்தித்து அந்தந்த மாவட்டங்களில் விஜய் மக்கள் இயக்கத்தின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனையில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பனையூரில், தமிழ்நாடு தலைமை செயலகத்தை பின்னணியாக வைத்து நடிகர் விஜய் போஸ்டர் அச்சிடப்பட்டுள்ளது.
செல்வம்
கரீம் பென்சிமா விலகல்: பிரான்ஸ் அணிக்கு பின்னடைவு!
உலக கோப்பை கால்பந்து: அணிகள், பரிசுத்தொகை, கட்டுப்பாடு முழு விவரம்!