அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் சிகிச்சைக்குப் பிறகு கஞ்சி குடித்துள்ளார்.
ஸ்டார் நடிகரான ரஜினிகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று (செப்டம்பர் 30) இரவு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
“ரஜினிக்கு இதயத்தில் இருந்து பிரியும் முக்கிய தமனியான பெருநாடியின் சுவரில் வீக்கம் இருந்ததால் அறுவை சிகிச்சை அல்லாத, டிரான்ஸ்கத்தீடர் முறை மூலம் சிகிச்சையளிக்கப்பட்டது. மூத்த இதயநோய் நிபுணர் சாய் சதீஷ் ரஜினிக்கு ரத்தநாளத்தில் ஸ்டன்ட் பொருத்தினார்” என்று அப்பல்லோ மருத்துவமனை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ரஜினியின் உடல்நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் வட்டாரத்தில் விசாரித்தபோது,
“ரஜினிக்கு லேசான நெஞ்சுவலி இருக்கிறது என அவரது குடும்ப மருத்துவரான இதயநோய் நிபுணர் சாய் சதீஷிடம் தொடர்பு கொண்டு தகவல் சொல்லியிருக்கிறார்கள். மருத்துவர் சாய்சதீஷ் அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்து வர சொன்னார். பரிசோதனை செய்த மருத்துவர்கள் ரஜினிக்கு ஏற்கனவே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்திருப்பதால் நேரடியாக ஆஞ்சியோ செய்ய முடியாது. காரணம் ஆஞ்சியோ செய்வதற்காக செலுத்தப்படும் கான்ட்ராஸ்ட் ஊசியை சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு போட முடியாது.
இந்த ஊசியை செலுத்தினால் அது சிறுநீரகத்தை பாதிக்கும். அதனால் சிடி ஆஞ்சியோ பிளாஸ்ட்டி ஸ்கேன் மூலம் ஆஞ்சியோ செய்தனர்.
இதற்காக காண்ட்ராஸ்ட் ஊசி மருந்தை குறைந்தளவு செலுத்தி இதயத்துக்கு செல்லும் ஒரு ரத்தக்குழாயில் அடைப்பு இருந்ததை நீக்கி ஸ்டன்ட் வைத்தனர்.
இந்த சிகிச்சை முடிந்த 6 மணி நேரத்துக்கு பிறகு அப்பல்லோ மருத்துவமனையில் விவிஐபிகளுக்கான சமையல்காரர் செய்த கஞ்சியை ஒரு டம்ளர் ரஜினி குடித்தார்.
தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வரும் ரஜினிக்கு நாளை மீண்டும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். அப்போது குறைந்தளவு கான்ட்ராஸ்ட் ஊசி செலுத்தியதன் காரணமாக சிறுநீரகத்தில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை பார்த்து நாளை மறுநாள் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்.
இன்று இரவு வழக்கமான உணவுகளை எடுத்துக்கொள்ளலாம் என்று ரஜினிக்கு மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்” என்கிறார்கள் அப்பல்லோ மருத்துவமனை வட்டாரத்தில்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வணங்காமுடி
ஜம்மு காஷ்மீர் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு: 5 மணி நிலவரம்!
மெரினாவில் விமானப் படை ஒத்திகை… ஆர்வத்துடன் கண்டுகளித்த பொதுமக்கள்!
தல, அங்க இட்லி சாப்புட்றாதிங்க தல, லட்சக்கணக்குல பில் போட்ருவாய்ங்க தல