கொரோனா பொது முடக்க காலத்தில் பொழுதுபோக்காக புகைப்படங்கள் எடுத்து, அதனை சமூகவலைதளங்களில் வெளியிட்டு வந்தனர் நடிகைகள்.
இதனை பார்த்த நடிகர்களும் அது போன்று புகைப்படங்களை வெளியிட தொடங்கினார்கள்.
ஒரு கட்டத்தில் புதிய வாய்ப்புகளை தேடும் திரைக்கலைஞர்களுக்கு சமூக வலைதளங்கள் விளம்பர தளமாக அமைந்தது.
தற்போது அந்த பட்டியலில் தன்னை நடிகர் ராதாரவி இணைத்துக் கொண்டுள்ளார். மிகவும் ஸ்டைலிஷாக ஆங்கிலப்படங்களில் நடிக்கும் நடிகரை போல், எடுத்துள்ள
புகைப்படங்களை தற்போது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

இது சம்பந்தமாக நடிகர் ராதாரவியிடம் பேசியபோது, “தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த கலைஞர்
எம் ஆர் ராதாவின் மகன் நான்’ என்னுடைய பள்ளி காலத்திலேயே ஜூலியஸ் சீசராக நாடகங்களில் நடித்த நான்,
வி கே ராமசாமி ,எம்.ஆர்.ஆர்.வாசு, டி கே சந்திரன், போன்றவர்களின் நாடகங்களிலும் நடித்துள்ளேன்.

கன்னடத்தில் ‘ரகசிய ராத்திரி’ என்னும் படத்தின் மூலம் என்னுடைய திரையுலக பயணத்தை தொடங்கினேன்
தமிழில் நடிகர் கமலஹாசன் இயக்குனர் கே பாலச்சந்தர் இயக்கத்தில் நடித்த ‘மன்மத லீலை’ படத்தில் அறிமுகமானேன்.
தொடர்ந்து இயக்குனர் டி ராஜேந்தரின் உயிருள்ளவரை உஷா, வைதேகி காத்திருந்தாள், உயர்ந்த உள்ளம், சின்ன தம்பி, உழைப்பாளி, குரு சிஷ்யன், என
இதுவரை சுமார் 500க்கும் மேற்பட்ட படங்களில், வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம், என எல்லா விதமான கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறேன்.

காலமாற்றம், தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப நம்மை மாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது அதனால்தான் இப்படி ஒரு புகைப்படம்” என்றார்.
இராமானுஜம்
உலகின் பழமையான நாடு: ஈரானில் என்ன இருக்கிறது?
ஆசிரியர்களை வகுப்பறையில் வைத்து பூட்டிய மாணவர்கள்: மன்னிப்பு கேட்ட தலைமையாசிரியர்!