கண்ணீரை வரவழைக்கும் சின்ன வெங்காய விலை: குறைவது எப்போது?

Published On:

| By Kavi

சின்ன வெங்காயத்தின் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

மழை பெய்தாலே வெங்காயத்தின் விலை அதிகரித்துவிடுகிறது. ஒரு கிலோ சின்ன வெங்காயம் 20 மற்றும் 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று(நவம்பர் 8) ஒரு கிலோ 100 ரூபாயை கடந்து விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.

கோயம்பேடு மொத்த விற்பனை சந்தையில் ஒருகிலோ சின்ன வெங்காயம் ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது சில்லறை விற்பனை கடைகளில் ரூ.120 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

கியாஸ் விலை உயர்வு, சமையல் எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் ஏற்கனவே கஷ்டப்பட்டு வரும் மக்களுக்கு சின்ன வெங்காயத்தின் விலை உயர்வு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது.

சின்ன வெங்காயத்தின் விலையை குறைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது இல்லத்தரசிகளின் எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது.

இதுதொடர்பாக சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பேசியுள்ளார்.

வேளாண்மை துறையில் 32 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கிய நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கொரோனா பொதுமுடக்க காலத்தில் 45,000 வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டன. இன்னும் 10 நாட்களில் சின்ன வெங்காயத்தின் விலை குறையும். விலை உயர்வை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கையை எடுத்து வருகிறோம்” என்று குறிப்பிட்டார்.

பிரியா

ஒரு லட்சம் பேருக்கு வேலை : முதல்வர்!

திமுக அதிமுக அண்ணன் தம்பி இயக்கம்தான் : ஓ.பன்னீர் செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share