சென்னை எழும்பூரில் அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர் முன்னேற்ற சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் செயற்குழுக் கூட்டம் இன்று (ஆகஸ்ட் 28 ) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கலந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் மகளிர் இலவசப் பயணம் அறிவித்த பிறகு, பயணிகளின் போக்குவரத்து அதிகரித்திருக்கிறது.
குறிப்பாக பெண்களின் பயணம் 40 சதவீதத்திலிருந்து 60, 62 சதவீதத்தைத் தாண்டி, சென்னையில் 69 சதவீதம் என்கிற அளவுக்கு பெண்களின் போக்குவரத்து சதவீதம் அதிகரித்திருக்கிறது.

எனவே பெண்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வழங்கியுள்ள இந்த இலவச பேருந்து பயண திட்டம் என்பது தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு லாபம் தரக்கூடிய ஒரு செயல்பாடாகத்தான் உள்ளது.
அனைத்து பேருந்துகளிலும் கேமரா வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே 500 பேருந்துகளில் கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளது. பழுதடைந்த பேருந்துகளை சரி செய்து வருகிறோம்” என்று கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
இலவசத்தால் வாழ்ந்தோமா ? வீழ்ந்தோமா ?