பூந்தமல்லி அருகே சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இன்று(ஜூன் 2) காலை நான்கு வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த விபத்தால் சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பூந்தமல்லியை அடுத்து செம்பரம்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்த சரக்கு வாகனம் ஒன்று திடீரென பிரேக் போட்டதால் பின்னால் வந்த வாகனங்கள் அடுத்தடுத்து ஒன்றுடன் ஒன்று மோதின. இதில் தனியார் தொழிற்சாலைக்கு ஊழியர்களுடன் சென்று கொண்டிருந்த வாகனமும் மோதியது.
இந்த விபத்தில் வேனில் இருந்த தனியார் நிறுவன ஊழியர்கள் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சம்பவம் அறிந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே, இந்த சாலை விபத்தால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை அடுத்து போக்குவரத்து போலீசார் அதனை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
ஒற்றை வரியில் மாமன்னன் படத்தின் எதிர்பார்ப்பை எகிற வைத்த கமல்ஹாசன்
“இசையுலக ஏகச் சக்ராதிபதியை வாழ்த்துகிறேன்”: கமல்
இளையராஜா பிறந்தநாள்: இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர்