கலாஷேத்ரா கல்லூரி முன்னாள் மாணவர்கள் சிலர் என்னை தொடர்புகொண்டு பேராசிரியர் ஹரி பத்மனுக்கு எதிராக பேச கூறினார்கள் என்று நடிகை அபிராமி தெரிவித்துள்ளார்.
கலாஷேத்ரா கல்லூரி பேராசிரியர்கள் நிர்மலா நாகராஜன், நந்தினி ஆகியோர் மீது நடிகை அபிராமி இன்று (ஏப்ரல் 6) சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “என்னுடைய கல்லூரிக்காக நான் குரல் கொடுக்கிறேன். அதற்காக என்னை பலரும் விமர்சிக்கிறார்கள். உண்மையான ஆதாரம் இல்லாமல் பேராசிரியர் ஹரி பத்மன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறாதீர்கள். கலாஷேத்ரா இந்தியாவின் கலாச்சார மையம். கல்லூரி குறித்து பலரும் அவதூறாக பேசுகிறார்கள்.
கலாஷேத்ரா கல்லூரி என்னுடன் இதயபூர்வமாக கலந்துள்ளது. கல்லூரியை பற்றி சிலர் தவறாக பேசும்போது நம்முடைய அம்மாவை சிலர் கேவலமாக பேசுவது போன்று உள்ளது.
கலாஷேத்ரா கல்லூரியில் மலையாளி, வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் என நிறைய பேர் படிக்கிறார்கள். கல்லூரியில் சாதி ரீதியான ஒடுக்குமுறைகள் எதுவும் இல்லை.
கலாஷேத்ரா பேராசிரியர்கள் நிர்மலா நாகராஜ், நந்தினி ஆகியோர் ஹரி பத்மனுக்கு எதிராக மாணவிகளை போராட தூண்டியிருக்கிறார்கள். முன்னாள் மாணவர்கள் சிலர் என்னை தொடர்புகொண்டு ஹரி பத்மனுக்கு எதிராக பேச கூறினார்கள். பேராசிரியர்களால் கல்லூரி மாணவர்கள் பலிகடா ஆக்கப்பட்டிருக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.
செல்வம்
பல்பீர் சிங்கிற்கு கண்டனம்: நீதிமன்ற புறக்கணிப்பில் வழக்கறிஞர்கள்!