ஆவின் பணி நியமனம்: தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி!

தமிழகம்

பணிநியமன விவகாரத்தில் ஆவின் உயர் அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்துப் பதிலளிக்கத் தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை இன்று (பிப்ரவரி 7) உத்தரவிட்டுள்ளது .

விருதுநகரைச் சேர்ந்த ஸ்ரீ லட்சுமி, சுமதி உள்ளிட்ட 41 பேர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தனர்.

அதில், விருதுநகர் ஆவினில் தாங்கள் 2021 முதல் பணியாற்றி வருவதாகவும், ஆனால், நேரடி பணி நியமனங்களில் விதிகளைப் பின்பற்றாமல்,

பணி ஆணைகள் வழங்கப்பட்டதாகக் கூறி, தங்களது பணி நியமனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த மனு நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுவை விசாரித்த நீதிபதி, விருதுநகர் ஆவினில் பணியாளர்களை தேர்வு செய்த உயர் அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, தமிழக அரசு தரப்பில் பதில் அளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்தார்.

சக்தி

தென்காசி கடத்தல் வழக்கு: இளம்பெண்ணை காப்பகத்தில் வைத்து விசாரிக்க உத்தரவு!

ஈரோடு இடைத்தேர்தல்: அமமுக விலகியது ஏன்?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *