ஆவின் நெய்யின் விலை இன்று (டிசம்பர் 16) முதல் லிட்டருக்கு ரூ. 50 உயர்த்தி விற்பனை செய்யப்பட உள்ளது.
ஆவினில் ஆரஞ்ச் பால் பாக்கெட் லிட்டருக்கு ரூ. 48-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த மாதம் ரூ. 12 விலை உயர்ந்து ரூ. 60-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதனால் பொதுமக்களுக்குப் பாதிப்பு இருக்காது என்றும் ஆவின் நிறுவனம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தற்போது ஆவின் நெய் விலையும் உயர்ந்துள்ளது. இதுவரை ஒரு லிட்டர் ரூ. 580-க்கு விற்பனை செய்யப்பட்ட ஆவின் நெய் தற்போது ரூ. 50 விலை உயர்ந்து ரூ. 630-க்கு விற்பனை செய்யப்பட உள்ளது.
500 மி.லி நெய் ரூ. 290-ல் இருந்து ரூ. 315 ஆகவும், 200 மி.லி நெய் ரூ. 130-ல் இருந்து ரூ. 145 ஆகவும், 100 மி.லி நெய் ரூ. 70-ல் இருந்து ரூ. 75 ஆகவும் விலை உயர்ந்துள்ளது.
இந்த புதிய விலை மாற்றம் இன்று (டிசம்பர் 16) முதல் விற்பனைக்கு வரும் என்று ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் ஆவின் நெய் லிட்டருக்கு ரூ. 45 விலை உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மோனிஷா
டிஜிட்டல் திண்ணை: உதயநிதியின் ஆட்டம் ஆரம்பம்: அதிர்ச்சியில் அதிகாரிகள்!
தமிழகத்தில் புதிதாக 10 பேருந்து நிலையங்கள்: எங்கெங்கு?