aavin delite 200 ml milk

இன்று முதல் ரூ.10-க்கு ஆவின் டிலைட் பால்!

தமிழகம்

ஊதா நிற ஆவின் டிலைட் 200 மி.லி பால் ரூ.10-க்கு இன்று (டிசம்பர் 1) முதல் விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகம் முழுவதும் மக்களின் விருப்பமான ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விநியோகம்  நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 4.5 சதவீதம் கொழுப்பு சத்து கொண்ட பச்சை நிற பாக்கெட்டிற்கு பதிலாக 3.5 சதவீதம் கொழுப்பு சத்து கொண்ட ஊதா நிற பால் பாக்கெட் விநியோகம்  அதிகரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

பச்சை நிற பால் பாக்கெட் விநியோகத்தை நிறுத்துவதற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். தொடர்ந்து பச்சை நிற பால் பாக்கெட் விநியோகத்தை நிறுத்த போவதில்லை. ஊதா நிற டிலைட் பால் பாக்கெட் விற்பனையை ஊக்குவிக்கப் போவதாக ஆவின் நிறுவனம் அறிவித்திருந்தது.

அதன்படி ஊதா நிற டிலைட் பால் இன்று முதல் மாதாந்திர அட்டை மூலம் ரூ.21-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மாதாந்திர அட்டை பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஊதா நிற டிலைட் பால் விற்பனையை ஊக்கப்படுத்தும் வகையில் 200 மி.லி அளவு கொண்ட சிறிய பால் பாக்கெட் ரூ.10-க்கு இன்று முதல் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விற்பனைக்கு வந்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோனிஷா

குடியரசு தலைவருக்கு ஆளுநர் ஏன் மசோதாவை அனுப்ப வேண்டும்? – உச்சநீதிமன்றம் கேள்வி!

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு… 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாதிரி வினாத்தாள் கையேடு!

+1
0
+1
1
+1
0
+1
0
+1
1
+1
0
+1
1