ஆடி அமாவாசை… ராமேஸ்வரத்தில் குவிந்த மக்கள்!

Published On:

| By Minnambalam Login1

ஆடி அமாவாசையான இன்று(ஆகஸ்ட் 4) தமிழகம் முழுவதும் மக்கள் தங்கள் முன்னோர்களின் ஆசீர்வாதத்தைப் பெறப் பல இடங்களில் தர்ப்பணம் கொடுத்து வருகிறார்கள். aadi amavasai

ஆடி அமாவாசை எதற்காகச் சிறப்புப் பெற்றது?

பொதுவாக மக்கள் குறிப்பிட்ட நாட்களில் தங்களது முன்னோர்களுக்குத் திதி கொடுத்து அவர்களது ஆசீர்வாதத்தைப் பெறுவார்கள். அதில் அமாவாசை ஒரு முக்கியமான நாள்.

சூரியனும் சந்திரனும் ஒரே நட்சத்திரத்தில் கூடும் ஆடி அமாவாசை தினம் மிகச் சிறப்பான நாள் என்று கருதப்படுவதால், மக்கள் அன்று தங்களது முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுப்பார்கள்.

 

என்ன செய்வார்கள்? aadi amavasai

மக்கள் இன்று கடவுள்களைத் தரிசித்துவிட்டு, மூன்று முக்கியமான விஷயங்களை செய்வார்கள். அவை:

புனித நீராடல்:

மனித நாகரீகம் வளர்ந்ததற்கு முக்கிய காரணம் நதிகள். அவைகளைக் கண்டுபிடித்து தந்த முன்னோர்களுக்கு நன்றி செலுத்த, நாட்டில் இருக்கும்  புண்ணிய நதிகள் என்று நம்பப்படும் காவிரி, கங்கை, தாமிரபரணி, கோதாவரி போன்ற நதிகளில் மக்கள் நீராடுவார்கள்.

தர்ப்பணம்:

ஒவ்வொருவரும் மறைந்த முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுக்க வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது. மக்கள் நோய் நொடி இல்லாமல்,சீரும் சிறப்புமாக வாழ தங்களது துறையில் முன்னேற அவர்களது முன்னோர்களுக்குத் தர்ப்பணம் வழங்குவார்கள்.

தர்ப்பணம் கொடுப்பதற்குத் தர்ப்பை புல், எள் மற்றும் அரிசி அல்லது அரிசி மாவைப் பயன்படுத்துவார்கள்.

பொதுவாகத் தர்ப்பணம் வீட்டின் மூத்த ஆண்களால் கொடுக்கப்படும். ஆனால், பெண்களும் கொடுக்கலாம் என்று சொல்லப்படுகிறது. மேலும், நமக்குப் பிடித்த ஒருவருக்கும் தர்ப்பணம் கொடுக்கலாம்.

தானம்:

இல்லாதவர்களுக்கு உணவு, உடை போன்றவற்றை தானம் செய்வார்கள். இன்று தமிழகத்தில் பல முக்கிய கோவில்களில் மக்கள் கூடியுள்ளார்கள். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் அக்னி தீர்த்த கடலில் தர்ப்பணம் செய்வதற்காக பல்லாயிரக்கணக்கான மக்கள் குவிந்துள்ளார்கள். இதனையடுத்து அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

விஜய்யின் ‘கோட்’ மூன்றாவது சிங்கிள்… கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்!

வயநாடு நிலச்சரிவு: தமிழ்நாடு நிதியுதவி… நன்றி தெரிவித்த பினராயி

ஹெல்த் டிப்ஸ்: லேடீஸ் ஸ்பெஷல்… பீரியட்ஸுக்கு முன்… தவிர்க்க வேண்டிய, சாப்பிட வேண்டிய உணவுகள் எவை?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share