தமிழக அரசின் நலத்திட்டங்கள் மற்றும் மானியங்களைப் பெறுவதற்கு ஆதார் அட்டை கட்டாயம் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மாநில அரசின் நலத்திட்டங்கள், சலுகைகள், மானியங்களைப் பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயம் எனத் தமிழ்நாடு நிதித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சமீபத்தில் வீடு, கைத்தறி, விசைத்தறி, குடிசை மற்றும் விவசாய மின் இணைப்புதாரர்கள் மின் இணைப்பு எண்ணை தங்களது ஆதாருடன் இணைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து மின் இணைப்புடன் ஆதாரை இணைக்கும் பணி தமிழகத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காகத் தமிழகத்தில் உள்ள அனைத்து மின்வாரிய அலுவலகங்களிலும் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாநில அரசின் திட்டங்கள், சலுகைகளை, மானியங்களைப் பொதுமக்கள் பெறுவதற்கு அடையாளமாக ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
பொதுமக்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் எளிமையாகக் கிடைக்க ஆதார் எண் உதவியாக இருக்கும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
ஆதார் எண் இல்லாதவர்கள், ஆதார் எண்ணை பெறும் வரை மற்ற ஆவணங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை பெறும் மாணவிகள், அரசின் சலுகைகளை பெறும் மீனவர்கள், விவசாயிகள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு ஆதார் எண் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
மோனிஷா
20ஆம் தேதி 8 மாவட்டங்களில் கனமழை!
கலைஞர் பேனா சின்னம்: பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு!