மின் இணைப்புடன் ஆதார்: பணம் வாங்கினால் நடவடிக்கை!

தமிழகம்

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க மின் வாரிய ஊழியர்கள் பொதுமக்களிடம் பணம் வாங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

நேற்று (நவம்பர் 28) முதல் தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்கள் துவங்கியது. டிசம்பர் 31-ஆம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.

நேற்று ஒரே நாளில் 2 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் மின் இணைப்புடன் ஆதார் எண்களை இணைத்தனர். இன்று தமிழகம் முழுவதும் 2,811 இடங்களில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.

மின்வாரிய ஊழியர்களுக்கு மின்சார வாரியம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “பொதுமக்களிடம் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க மின்வாரிய ஊழியர்கள் பணம் வாங்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

சிறப்பு முகாமில் கணினிகளில் நெட்வொர்க் பிரச்சனை ஏற்பட்டால், உடனடியாக மற்றொரு கணினி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.

உணவு இடைவேளை, தேனீர் இடைவேளைகளில் பணியில் ஒரு அதிகாரி கண்டிப்பாக இருக்க வேண்டும்.

சிறப்பு முகாம்களுக்கு வரும் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்வம்

கனமழை: இன்று 2 மாவட்டங்களுக்கு விடுமுறை!

சென்னை விமான நிலைய போக்குவரத்து நெரிசலைக் குறைக்க புதிய வழிகள்!

+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0