இந்தியாவுக்கு ஆதார்: தமிழகத்துக்கு ’மக்கள் ஐடி’!

தமிழகம்

ஆதார் அட்டையைப் போல் தமிழகத்தில் விரைவில் மக்கள் ஐடி என்ற பெயரில் அடையாள அட்டை வழங்கப்பட இருக்கிறது.

இன்று, ஆதார் அட்டை என்பது அனைவருடைய ஆவணமாக உள்ளது. அந்த அட்டை மூலமே அனைத்து வகையான சலுகைகளும் பெறப்படுகிறது. குறிப்பாக, ரேஷன் பொருட்கள், மொபைல் சிம், வங்கிக் கணக்கு, பான் அட்டை, வாக்காளர் அட்டை என எல்லாவற்றுக்கும் ஆதார் அட்டை அவசியமாகிறது.

அதுமட்டுமின்றி, ஆதார் இந்தியாவில் தனி நபர் அடையாள அட்டையாகவும் பயன்படுகிறது. இந்த நிலையில் ஆதார் அட்டைபோல் தமிழகத்திலும் ’மக்கள் ஐடி’ என்ற 12 இலக்க அட்டை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் வசிப்பவர்களுக்கு 10 முதல் 12 இலக்க ’மக்கள் ஐடி’ என்ற அட்டையை அனைத்து தமிழக மக்களுக்கு வழங்க உள்ளதாகவும் இந்த மக்கள் ஐடி சமூக நலத் திட்டங்களை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்ப்பதற்கு உதவியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

தமிழ்நாடு அரசால் இந்த ’மக்கள் ஐடி’ உருவாக்கப்பட இருப்பதாகவும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் இதனை செயல்படுத்துவதற்கான பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதன்மூலம் தமிழகத்தில் வசிக்கும் வெளியூர் மற்றும் வெளிநாட்டு மக்கள் யார் யார் என்பதை அறிந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெ.பிரகாஷ்

ராகுலின் யாத்திரையைப் புறக்கணிக்கும் முக்கிய தலைவர்கள்: பின்னணி என்ன?

சொத்து வரி உயர்வு செல்லும்: உயர்நீதிமன்றம் அதிரடி!

+1
0
+1
0
+1
0
+1
7
+1
0
+1
0
+1
0

3 thoughts on “இந்தியாவுக்கு ஆதார்: தமிழகத்துக்கு ’மக்கள் ஐடி’!

  1. Already when Central ids like PAN and AADHAR are there this is superfluous.Ration card is an id.The state Govt is posing to act like a separate Nation.Are they planning to issue கடவு சீட்டு also.

  2. வட நாட்டவர்களுக்கு இதை எக்காரணம் கொண்டும் வழங்ககக்கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *