வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க 2024 மார்ச் 31 ஆம் தேதி வரை அவகாசம் அளித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்க கடந்த 2021 ஆம் ஆண்டு மக்களவையில் தேர்தல் சட்டம் திருத்த மசோதா மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நடவடிக்கையானது, ”ஒரே நபரின் பெயரை ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் அல்லது ஒரே தொகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை பதிவு செய்வதை அடையாளம் காண உதவுகிறது” என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
இதன்மூலம் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்கும் பணி நடைபெற்று வந்தது. வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்க 2023 ஏப்ரல் 1 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை அவகாசத்தை நீட்டித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மோனிஷா