தமிழ் புதல்வன் திட்டத்தில் மாதம்தோறும் ரூ.1000 பெறுவதற்கு ஆதார் எண் அவசியம் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று கல்லூரியில் சேர்ந்த மாணவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் தமிழக அரசு வழங்கி வருகிறது.
மாணவிகளை போல மாணவர்களும் பயன் பெற தமிழ் புதல்வன் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி வரும் ஆகஸ்ட் மாதம் முதல் மாணவர்களுக்கு ‘தமிழ் புதல்வன்’ திட்டத்தின் கீழ் ரூ.1,000 வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என்று கூறினார்.
இந்த திட்டத்துக்காக ரூ.360 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று இந்த ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தாக்கலின் போது நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.
இந்நிலையில் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் செயல்படுத்தப்பட உள்ள தமிழ் புதல்வன் திட்ட பணிகளை தமிழக அரசு தொடங்கியிருக்கிறது.
மாணவர்கள் ஆதார் எண் வைத்திருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க கல்வி நிறுவனங்களுக்கு தமிழக அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த தகவலை மாணவர்களுக்கு தெரியும் வகையில் கல்வி நிறுவனங்கள் விளம்பரப்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது.
இந்த திட்டத்தில் பயன்பெற மாணவர்கள், ஆதார் அட்டை, இ மெயில் ஐடி, கைபேசி எண், மின் ரசீது, முகவரி ஆதாரம், பான் கார்டு, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவை வைத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
தமிழக ரயில்வே திட்டங்களுக்கு எத்தனை கோடி? மத்திய அமைச்சர் பதில்!
விஜய் ஆண்டனியின் அடுத்த கட்டம்!