தமிழ்நாடு அரசின் சைக்கிள் ஒப்பந்ததாரர் சுந்தர பரிபூரணம் வீட்டில் இன்று காலை முதல் வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ஏஒன் சைக்கிள் உரிமையாளர் சுந்தர பரிபூரணம் வீட்டில் 7க்கும் அதிகமான வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் அரசின் இலவச சைக்கிள் கொள்முதலுக்கான ஒப்பந்தத்தை ஏஒன் சைக்கிள் உரிமையாளர் சுந்தர பரிபூரணம் பெற்றிருந்தார்.
இலவச சைக்கிள் வழங்கும் ஒப்பந்தத்தைக் கூடுதல் விலைக்கு சுந்தர பரிபூரணம் பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இந்த சோதனை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
இதுதவிர நுங்கம்பாக்கம் பைகிராஃபட்ஸ் சாலையில் உள்ள போயல் கெமிக்கல்ஸ் நிறுவனத்திலும் சோதனை நடந்து வருகிறது.
கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்குத் தொடர்புடைய இடங்கள் உட்பட பல்வேறு இடங்களில் சோதனை நடத்திய நிலையில் இன்று ஏஒன் சைக்கிள் உரிமையாளர் வீட்டில் சோதனை நடத்தி வருகிறார்கள்.
பிரியா
வங்கிக் கணக்கு முடக்கம்: உதயநிதி அறக்கட்டளை விளக்கம்!
ரசிகர்களால் கண் கலங்கினேன்: தோனி நெகிழ்ச்சி!