வலிக்காமல் இறக்க கூகுளில் தேடிய இளம்பெண்: பரிதாப தற்கொலை!

தமிழகம்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள தோட்டக்காட்டூரில் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருமணமான 4 மாதமே ஆன நிலையில், உடல்நிலை சரியில்லாத பாட்டியை பார்க்க வந்த இந்து என்ற பட்டதாரி பெண், முகத்தில் பிளாஸ்டிக் கவரை சுற்றி டேப் வைத்து ஒட்டிக்கொண்டு, ஆன்லைனில் வாங்கிய ஹீலியம் வாயுவை, டியூப் மூலமாக சுவாசித்து தற்கொலை செய்து கொண்டார்.

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பொலவக்காளிபாளையம் தோட்டக்காட்டூரை சேர்ந்தவர் திருவேங்கடசாமி மரகதமணி தம்பதியரின் மகள் இந்து (25 )பிஇ கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்துள்ள இந்து, கோவையில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

இவருக்கும் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நலகண்டன் பாளையம் துளசி நகரை சேர்ந்த விஷ்ணு பாரதி(30) என்பவருக்கும் இடையே கடந்த ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது.

அவரும் சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். திருமணத்திற்கு பிறகு கணவன் மனைவி இருவருமே சென்னையில் தங்கி வேலை செய்து வந்தனர்.

A young girl searched Google to die without pain

இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் பொலவகாளிபாளையம் அருகே உள்ள தோட்டக்காட்டூரில் உள்ள இந்துவின் பாட்டி கீழே விழுந்து படுகாயம் அடைந்த நிலையில் பாட்டியை பார்ப்பதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்து வந்துள்ளார்

நேற்று (செப்டம்பர் 16 )காலை வீட்டிலிருந்து தனது அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்ட இந்து இரவு வரை வெளியே வரவில்லை.

இதனால் அருகில் இருந்தவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த பொழுது முகத்தில் பிளாஸ்டிக் கவரை சுற்றி கழுத்தை சுற்றி முழுமையாக டேப் வைத்து ஒட்டிவிட்டு,

ஆன்லைனில் வாங்கிய ஹீலியம் வாயுவை அந்த கவருக்குள் செலுத்தி கொடூரமான முறையில் தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்த கோபி செட்டிபாளையம் போலீசார் இந்துவின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்துவின் செல்போனில் வலியில்லாமல் தற்கொலை செய்து கொள்வதற்காக இந்த ஹீலியம் வாயு அடங்கிய பாட்டிலை ஆன்லைனில் வாங்கி இருப்பது தெரிய வந்தது.

திருமணமாகி நான்கு மாதங்களே ஆவதால் வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியர் மற்றும் டிஎஸ்பி விசாரணை நடத்தி வருகின்றனர்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

வைரலாகும் தூரிகையின் ‘தற்கொலை விழிப்புணர்வு’ பதிவு!

ஆஃபர்களை அள்ளிக் கொட்டும் சேம்சங் நிறுவனம்!

+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
4

Leave a Reply

Your email address will not be published.