15 பேரால் கடத்தப்பட்ட இளம்பெண்… மீட்கப்பட்டது எப்படி?

சினிமாவை மிஞ்சும் அளவுக்கு 15 பேரால் கத்தி முனையில் கடத்திச் செல்லப்பட்ட இளம்பெண் பத்திரமாக மீட்கப்பட்டது எப்படி என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

தஞ்சை மாவட்டம் ஆடுதுறை கஞ்சமேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரன்(34). இவர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள மயிலம்மன் நகரில் உள்ள தனது பாட்டி பிரேமா வீட்டில் தங்கியிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பட்டதாரி இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.   இருவரும் காதலித்ததாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் சிறிது நாட்களுக்குப் பிறகு விக்னேஸ்வரனின் நடவடிக்கை பிடிக்காமல் அவருடன் பழகுவதை அப்பெண் நிறுத்தினார்.

ஆனால் அந்த பெண்ணை விக்னேஸ்வரன் விடாமல் துரத்தி , அவரது வீட்டுக்குச் சென்று தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுபற்றி, அப்பெண் வீட்டார் மயிலாடுதுறை காவல்நிலையத்தில் 2 முறை புகார் அளித்தனர். இருதரப்பினரையும் அழைத்து பேசிய மயிலாடுதுறை போலீசார் இனி அந்தப் பெண்ணை தொந்தரவு செய்யக்கூடாது என விக்னேஸ்வரனிடம் எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பினர்.

அதை கண்டுகொள்ளாத விக்னேஸ்வரன் கடந்த ஜூலை 12ஆம் தேதி அப்பெண்ணை கடத்த முயற்சித்துள்ளார். அப்போது அவரிடமிருந்து தப்பிய இளம்பெண் இதுகுறித்து மீண்டும் மயிலாடுதுறை போலீஸில் புகார் அளித்தார். வீடுபுகுந்து பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சித்தல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த  மயிலாடுதுறை போலீஸார் விக்னேஸ்வரனை தேடி வந்தனர். 

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி இரவு, பயங்கர ஆயுதங்களுடன் காரில் வந்த விக்னேஸ்வரன் மற்றும் அவரது கூட்டாளிகள் சுமார் 15க்கும் மேற்பட்டோர், அப்பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்து, வலுக்கட்டாயமாக  தூக்கிச் சென்றுள்ளனர். தகவலறிந்த மயிலாடுதுறை டிஎஸ்பி வசந்தராஜ் தலைமையிலான போலீஸார் உடனடியாக நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர்.

வீட்டில் இருந்த   சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி பெண்ணைக் கடத்திய நபர்களை தேடினர். கடத்தல் சம்பவத்தையடுத்து மாவட்டம் முழுவதும் உள்ள போலீஸார் உஷார் படுத்தப்பட்டனர். வீடு புகுந்து வலுக்கட்டாயமாக இளம் பெண் கடத்தப்பட்ட சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இதையடுத்து விசாரணையை துரிதப்படுத்திய போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து இளம்பெண் கடத்தப்பட்ட கார் எண் குறித்து அனைத்து சோதனைச்சாவடிகளுக்கும் தகவல் தெரிவித்தனர்.

விக்கிரவாண்டி டோல்கேட் அருகே அந்தக் கார் செல்வது தெரியவந்தது. அப்போது அந்தக் காரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். அதில் விக்னேஸ்வரன் அவரது கூட்டாளிகளான மயிலாடுதுறையை சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ், விழுப்புரத்தை சேர்ந்த செல்வகுமார் ஆகியோர் இருந்தனர். அவர்களிடம் இருந்து இளம்பெண்ணை பத்திரமாக மீட்ட போலீசார் மயிலாடுதுறை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். கடத்தலில் தொடர்புடைய மற்றவர்களையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

கலை.ரா

Exclusive: மாணவி ஸ்ரீமதி கொலையா, தற்கொலையா!   இரவு முதல் அதிகாலை வரை நடந்தது என்ன?  துல்லிய ரிப்போர்ட்!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts