வேங்கைவயல் விவகாரம்: சோதனையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
வேங்கைவயல் நீர்த்தேக்க தொட்டியில் கலக்கப்பட்ட மனித மலம் ஒரு பெண் மற்றும் 2 ஆண்களுடையது என்று அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகேயுள்ள வேங்கைவயல் கிராமத்தில் கடந்த டிசம்பர் மாதம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித மலம் கலந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு அரசு உத்தரவின் பேரில் சி.பி.சி.ஐ.டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த 4 மாதங்களாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சிபிசிஐடி போலீசார் புதுக்கோட்டை மாவட்ட எஸ்சி, எஸ்டி சிறப்பு நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில்,
வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக 11 பேரிடம் டி.என்.ஏ சோதனை நடத்த நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில் வேங்கைவயல் நீர்த்தேக்க தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட நீரை பகுப்பாய்வு பரிசோதனை செய்ததில் ஒரு பெண் மற்றும் 2 ஆண்களுடையது என்று தெரியவந்துள்ளது.
இதனையடுத்து வேங்கைவயல் கிராமத்தை சேர்ந்த 9 பேருக்கும், காவேரி நகர் பகுதியை சேர்ந்த ஒருவர், கீழமுத்துக்குடி பகுதியைச் சேர்ந்த ஒருவர் என 11 பேருக்கு இன்று அல்லது நாளை புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியில் டி.என்.ஏ பரிசோதனை நடத்தப்பட உள்ளது.
கடந்த நான்கு மாதங்களாக 147 நபர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து சாட்சியங்களை பதிவு செய்துள்ளனர்.
எனினும் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படாதது தமிழ்நாட்டில் பெரும் விவாதத்தை எழுப்பியுள்ளது.
இந்நிலையில் நீர் பகுப்பாய்வு மற்றும் டி.என்.ஏ பரிசோதனை மூலம் வேங்கைவயல் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட உண்மையான குற்றவாளிகளை சிபிசிஐடி போலீசார் நெருங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
335 நாட்களுக்கு பிறகு முதல் வெற்றி பெற்ற டெல்லி அணி
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!