செஃல்பி பிரியர்களே ஒரு நிமிஷம்! வீடியோ வைரலாகும்…. உங்கள் வாழ்க்கை என்னாகும்?

தமிழகம்

செல்ஃபி எடுக்க முயற்சித்து அருவியில் தவறி விழுந்த இளைஞரை தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர்.

தமிழகத்தில் பல இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அருவிகளில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் மக்கள் அருவிகளை சென்று பார்ப்பதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் நீர் அதிகளவு கொட்டும் அருவிகளில் மக்கள் குளிப்பதற்கு அரசு தடை விதித்துள்ளது. இதனால் தூரத்தில் இருந்தபடியே அருவிகளை பார்த்துவிட்டு செல்கின்றார்கள்.

எச்சரிக்கை விடுத்தும் கூட…

ஆனால் சிலர் சமூக வலைதளங்களில் தங்கள் படம் வைரலாக வேண்டும் என்ற நப்பாசையில், அருவிக்கு அருகில் சென்று செல்ஃபி வீடியோ எடுப்பது போன்ற ஆபத்தான காரியங்களை செய்து வருகின்றனர்.

இதில் சில காரியங்கள் விபரீதமாக முடிந்து விடுகிறது. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் காவல்துறை உள்ளிட்ட அரசுத் துறைகள் சார்பில், செல்ஃபி எடுக்கக் கூடாது என்றெல்லாம் எச்சரிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர். ஆனாலும் சிலர் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அபாயத்தில் சிக்கிக் கொள்கின்றனர்.

நண்பன் எடுத்த வீடியோ

திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறை அருகே உள்ள புல்லாவெளி அருவியில் இளைஞர் ஒருவர் செல்ஃபி எடுக்க வேண்டும் என்று அருவிக்கு அருகில் இறங்கி சென்றுள்ளார்.
அப்போது திடீரென்று அந்த இளைஞர் நிலை தடுமாறி கீழே விழுந்து அருவியில் அடித்துச் செல்லப்பட்டார். இவை அனைத்தும் அந்த இளைஞரின் நண்பன் எடுத்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

காணாமல் போன அவரை தீயணைப்பு துறையினர் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. தொடர்ந்து அந்த இளைஞரை தேடும் பணி நடந்து வருகிறது. இளைஞர் விபத்துக்குள்ளான வீடியோ பலராலும் பார்க்கப்பட்டும், பகிரப்பட்டும் வருகிறது.
இதுபோன்ற சம்பவங்களை எத்தனை முறை பார்த்தாலும் கேள்விப்பட்டாலும், அதனை அப்போதே மறந்துவிட்டு மீண்டும், மீண்டும் சிலர் இதுபோன்ற காரியங்களை செய்து வருகின்றனர்.

இது முதல் முறை அல்ல

இவ்வாறு நடப்பது இது முதல் முறை அல்ல… காவிரி ஆற்றில் கடந்த ஜூலை மாதம் இளைஞர்கள் மூன்று பேர் நீருக்கு மத்தியில் நின்று செல்ஃபி எடுக்க வேண்டும் என்று போய் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர்.

கடுமையாக முயற்சித்து தீயணைப்பு துறையினர் அவர்களை மீட்டனர். மேலும் பிப்ரவரி மாதம் மதுரையில் 500 அடி பள்ளத்தில் இளைஞர் ஒருவர் விழுந்து மாயமானார். கடந்த டிசம்பர் மாதம் 2021 ஆம் ஆண்டு பழனியில் வரதமா நதி அணையில் செல்ஃபி எடுக்கும் போது தவறி விழுந்து மூன்று பேர் உயிரிழந்தனர்.

இதுபோன்ற பல விபத்துக்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு தான் வருகிறது. இதில் பல விபத்துகள் நிகழும் போது அவர்களது நண்பர்கள் உடன் இருந்தும், அவர்கள் தங்களது நண்பர்களை எச்சரிக்கவோ காப்பாற்றவோ செய்யாமல்…. அந்த கொடுமையையும் வீடியோ எடுக்கிறார்கள் என்பதுதான் அதைவிடப் பெரிய கொடுமை.

இயற்கையோடு விளையாட நினைக்கும் வீடியோ பிரியர்களே…. உங்கள் வீடியோ வைரலாகும். ஆனால் உங்கள் வாழ்க்கை என்னாகும் என்பதை நினைத்துப் பாருங்கள். செஃல்பி மோகத்தை விட்டொழியுங்கள்!

மோனிஷா

எதிரிகள் கதறினாலும் கலைஞரின் புகழ் மறையாது : மு.க.ஸ்டாலின்

+1
0
+1
1
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0

2 thoughts on “செஃல்பி பிரியர்களே ஒரு நிமிஷம்! வீடியோ வைரலாகும்…. உங்கள் வாழ்க்கை என்னாகும்?

  1. “500 அடி இளைஞர் ஒருவர் பள்ளத்தில் விழுந்து மாயமானார்.” – தரமற்ற செய்தி.

    இதுதான் புதுப்பொலிவோ?!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *