ஒரு ரூபாய்க்கு புடவை…குவிந்த பெண்கள்!

தமிழகம்

கிருஷ்ணகிரி கே தியேட்டர் சலையில் ’ஸ்ரீ வெங்கடேஷ்வரா’ சில்க்ஸ் என்ற பிரபலமான ஜவுளி கடை ஒன்று உள்ளது. இந்த கடையில் தான் ஒரு வித்தியாசமான சலுகையை அறிவித்துள்ளனர் அந்த கடை உரிமையாளார்கள்.

தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளான தீபாவளி, பொங்கல் மற்றும் ஆடி மாதங்களில் வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக பல்வேறு சலுகைகளை அவ்வப்போது பல ஜவுளி கடைகள் அறிவித்து வருகின்றனர்.


சில கடைகளில் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்று அறிவிப்பார்கள். ஆனால், கிரிஷ்ணகிரியில் உள்ள கே தியேட்டர் பகுதியில் கடந்த ஒரு வருடமாக செயல்பட்டு வரும் பிரபலமான ஜவுளிக்கடைகளில் ஒன்றான ஸ்ரீ வெங்கடேஷ்வரா சில்க்ஸ் இன்று (செப்டம்பர் 10 ) முதலாம் ஆண்டு தொடக்க விழாவை கொண்டாடியது.

அதற்காக அந்த ஜவுளி நிறுவனம் ஒரு வித்தியாசமான அறிவிப்பை வெளியிட்டது. ஜவுளிக்கடைக்கு முதலில் வரும் 500 பேருக்கு ஒரு ரூபாய்க்கு புடவை , ஆட்டோ ஓட்டுனர்களுக்கு இலவச பேண்ட், சர்ட் கொடுப்பதாக கூறியுள்ளது. இதனால் அதிகாலையில் இருந்தே அங்கு மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.பெண்கள் முண்டியடித்துக்கொண்டு புடவை வாங்க கடைக்குள் செல்கின்றனர். கடை ஊழியர்கள் கூட்டத்தை சமாளிக்க முடியமல் திணறி வருகின்றனர். அதே ஜவுளி கடையில் வேலை செய்யும் 500 ஊழியர்கள் இந்த கூட்டத்தை கட்டு படுத்த நியமிக்கப்பட்டுள்ளனர்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

+1
0
+1
2
+1
1
+1
1
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published.