காஞ்சிபுரத்தில் கிடப்பில் போடப்பட்ட மழைநீர் வடிகால் பள்ளத்தில் தவறி விழுந்து தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் இன்று (நவம்பர் 10) உயிரிழந்தது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தற்போது, பருவமழை தொடங்கிவிட்ட நிலையில் சில பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளன.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு பகுதியில் கிடப்பில் போடப்பட்ட மழைநீர் வடிகால் பள்ளத்தில் தவறி விழுந்து இன்று தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பாலண்டீஸ்வரர் தெருவைச் சேர்ந்த லட்சுமிபதி(42) என்ற அந்த நபர் அதிகாலை பணிக்கு செல்லும் வழியில் தோண்டப்பட்டிருந்த வடிகால் பள்ளத்தை கடக்கும்போது தவறி விழுந்துள்ளார்.
பின்னர் அங்குள்ளவர்கள் போலீசாருக்கு தொடர்பு கொண்டு அவரது உடலை மீட்டபோது லட்சுமிபதி உயிரிழந்தது தெரியவந்தது.
இதனையடுத்து பிரேதப் பரிசோதனைக்காக உடலை கைப்பற்றிய போலீசார், இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாங்காடு நகராட்சியில் மழைநீர் வடிகால் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதாக ஏற்கெனவே புகார் அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் கிடப்பில் போடப்பட்ட மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து ஊழியர் ஒருவர் தற்போது உயிரிழந்துள்ளது மாங்காடு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் சென்னை எம்ஜிஆர் நகரில் தோண்டப்பட்ட மழைநீர் வடிகால் பள்ளத்தில் தவறி விழுந்து தனியார் தொலைகாட்சியில் பணிபுரிந்த முத்து கிருஷ்ணன் என்பவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்டோபர் ஜெமா
”என் பயம் போனதற்கு இது தான் காரணம்”: சிம்பு சொன்ன சீக்ரெட்!
T20 WorldCup 2022: பவர் ஹிட்டர்கள் நிரம்பிய இங்கிலாந்து… தகர்க்குமா இந்தியா?