திமுகவின் நீட் எதிர்ப்பு கையெழுத்து இயக்கத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளாக நடைமுறைபடுத்தி வரும் நீட் தேர்வுக்கு தமிழ்நாடு அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
தற்போது ஆளும் திமுக அரசும் நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அனைத்து கட்சி ஆதரவுடன் நீட் விலக்கு தீர்மானம் நிறைவேற்றி ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால் இதுவரை அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் உள்ளார் ஆளுநர்.
இதனையடுத்து நீட் தேர்வு ரத்து செய்ய கோரி 50 நாளில் 50 இலட்சம் பேரின் கையெழுத்து பெற்று, குடியரசுத்தலைவருக்கு அனுப்பும் நோக்கோடு, திமுக சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கையெழுத்து இயக்கத்தில் மாணவர்களிடம் கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்குவதாக தேசிய மக்கள் கட்சித் தலைவர் எம்.எல். ரவி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் பரத சக்கரவர்த்தி, லக்ஷ்மி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (அக்டோபர் 26) விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுவை அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், அடுத்த வாரம் தலைமை நீதிபதி அமர்வில் முறையிட மனுதாரருக்கு அறிவுறுத்தி உள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிரிஸ்டோபர் ஜெமா
இந்த முறையாவது திட்டமிட்டபடி ரிலீசாகுமா துருவ நட்சத்திரம்?
கனமழைக்கு வாய்ப்பு: எந்தெந்த மாவட்டங்களில்?
பிராடு கும்பல்..