சென்னை கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் உணவு தயாரிப்பு, உணவு மற்றும் குளிர்பானங்கள் உபசரிப்பு பிரிவில் மாணவர் மாணவியர்கள் நேரடி சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் இயங்கும் கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் உணவு தயாரிப்பு (பொது), உணவு மற்றும் குளிர்பானங்கள் உபசரிப்பு பிரிவில் 2024-25ம் ஆண்டிற்கான மாணவர் மாணவியர்களுக்கான நேரடி சேர்க்கை நடைபெற்று வருகிறது.
சேர்க்கைக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி கல்விதகுதி ஆகும். பயிற்சிகாலம் 1 வருடம். கட்டணம் ரூ.185 மட்டுமே. பயிற்சி முடித்தவர்களுக்கு மத்திய அரசின் என்.சி.வி.டி சான்றிதழ் வழங்கப்படுவதுடன் முன்னனி 5 நட்சத்திர ஓட்டல்களில் (தாஜ் குரூப் ஆப் ஓட்டல்ஸ், சவேரா உள்ளிட்டவை) 100 சதவீதம் வேலைவாய்ப்பு பெற்று தரப்படும்.
படிக்கும் போதே பகுதி நேர வேலை வாய்ப்பு பெறலாம். படிக்கும் காலத்தில் மாதம் ரூ.750 உதவித்தொகை வழங்கப்படுவதுடன், இலசவ சீருடைகள், மிதிவண்டி, காலணிகள், பேருந்து அட்டை மற்றும் ரயில் பயண சலுகை. வெளி மாவட்ட மாணவர்களுக்கு உணவுடன் கூடிய கட்டணமில்லா விடுதி வசதியும் உண்டு.
இங்கு பயின்று தேர்ச்சி பெற்ற மாணவர்கள் வெளிநாடுகளிலும், கப்பல் துறையிலும் பணிபுரிந்து வருகிறார்கள்.
மேலும் தகவல்களுக்கு 9551422064, 8838214399, 9962115569 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்” என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
’ஆம்ஸ்ட்ராங் படுகொலை… வெறும் வாக்குக்கு மட்டும் தான் சமூக நீதியா?’ : திமுக அரசை விளாசிய பா.ரஞ்சித்
ஒலியை விட 10 மடங்கு வேகத்தில் உக்ரைனைத் தாக்கிய ரஷ்ய ஏவுகணை: 10 பேர் பலி!