புலிக்குட்டி விற்பனை: இளைஞர் சிக்கியது எப்படி?

தமிழகம்

புலிக்குட்டி விற்பனைக்கு என வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்த இளைஞரை வனத்துறையினர் கைதுசெய்து வழக்குப் பதிவு செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் என்ற இளைஞர் ஆந்திராவில் சட்டப்படிப்பு பயின்று வருகிறார். இவர் தற்போது வேலூரில் சார்ப்பனாமேடு பகுதியில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்துத் தங்கியுள்ளார்.

இந்நிலையில், பார்த்திபன் தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் சில தினங்களுக்கு முன்பு புலிக்குட்டி விற்பனைக்கு உள்ளது. அதன் விலை 25 லட்சம் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இது ஆர்டர் செய்தால் 10 நாட்களில் டெலிவரி, இது டைம் பாஸ் செய்வதற்கு அல்ல, உண்மையான தகவல் எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த விஷயம் சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கியது.

ஆகையால் இதனைக் கண்காணித்த சென்னையைச் சேர்ந்த தலைமை வனத்துறையினர் வேலூர் மாவட்ட வனத்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து வேலூர் வன அலுவலர் ரவிக்குமார் தலைமையிலான அதிகாரிகள் சார்பனமேடு பகுதியில் வசித்து வந்த பார்த்திபனை வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972-ன் கீழ் கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர்.

இதனையடுத்து இவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் பார்த்திபன் ஒரு இடைத்தரகராகத் தான் செயல்பட்டு வருகிறார்.

இதில் முக்கிய புள்ளியாக இருப்பவர் சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த தமிழ் என்று விசாரணையில் தெரிய வந்தது.

இந்த தகவலின் அடிப்படையில் சென்னை வனத்துறையினர் தமிழ் என்பவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பார்த்திபன் மற்றும் தமிழ் ஆகிய இருவருக்கும் தேசிய மற்றும் சர்வதேச அளவில் தொடர்பு இருப்பதாகவும் வனத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

மோனிஷா

யானைக்குட்டிக்கு குடை பிடித்த வனத்துறை அதிகாரி – வைரல் வீடியோ!

+1
1
+1
2
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *