திண்டிவனம் அருகே அடுத்தடுத்து 15க்கும் மேற்பட்ட வாகனங்கள் மோதிக் கொண்டதில் பெரிதளவு விபத்து ஏற்பட்டுள்ளது.
திண்டிவனம் சென்னை நெடுஞ்சாலையில், அச்சரப்பாக்கம் அருகே ஓங்கூர் பகுதியில் பாலம் பழுது பார்க்கும் வேலை நடந்து வருவதால் அப்பகுதியில் உள்ள சாலை ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் ஒரே சாலையில் எதிரெதிராக வாகனங்கள் சென்று கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், ஓங்கூர் பகுதியில் நேற்று சுமார் 4 மணியளவில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதிய விபத்தில் ஒருவர் பலத்த காயம் அடைந்தார். சாலையில் சென்று கொண்டிருந்த கண்டெயினர் லாரியை பேருந்து ஒன்று முந்தி செல்ல முயற்சித்துள்ளது. ஆகையால், கண்டெயினர் லாரி ஒட்டுநர் பேருந்துக்கு வழி விட்டு திடீரென்று பிரேக் அடித்ததால் லாரியை பின் தொடர்ந்து வந்த வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக் கொண்டு விபத்து ஏற்பட்டுள்ளது.
பெரிதளவு, பாதிப்பு ஏற்படவில்லை என்றாலும் அடுத்தடுத்து 15-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மோதிக் கொண்டு சேதமடைந்தன.
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் விபத்தின் காரணமாக சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
விபத்து தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மோனிஷா