காகித ஆலைக்கு கொள்முதல் செய்யப்பட்ட காகிதங்கள் தொடர்பான ஜி.எஸ்.டி. பில்களில் குளறுபடி இருப்பதாக கூறி ரூ.5000 லஞ்சம் பெற்ற மதுரை வணிக வரித்துறை அதிகாரிகள் மீது இன்று(மே27) வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரையில் இயங்கி வரும் வணிக வரித்துறையின் துணை ஆணையர் அலுவலகத்தில் மாநில வரி அதிகாரியாக பணியாற்றி வரும் சசிகலா,
மாநில துணை வரி அதிகாரிகளாக பணியாற்றி வரும் கணேசன் மற்றும் பாலகுமார் ஆகியோர்,
கடந்த 2021 செப்டம்பர் 14 அன்று பாண்டிகோவில் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடியை சேர்ந்த டைமண்ட் எண்டர்பிரைசஸ் என்ற காகித ஆலைக்கு சென்னையிலிருந்து ரூ.4.40 லட்சம் மதிப்பிலான காகிதங்களை கொள்முதல் செய்து கொண்டு வந்த, அந்நிறுவனத்தின் லாரியை மடக்கி அவர்கள் மூவரும் சோதனையிட்டுள்ளனர்.
காகிதங்கள் கொள்முதல் செய்யப்பட்டது தொடர்பான ஜி.எஸ்.டி. பில் தேதியில் குழப்பம் இருப்பதாக கூறி, அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு ரூ.20,000 லஞ்சம் கேட்ட நிலையில், இறுதியாக ரூ.5,000 லஞ்சம் பெற்றுக்கொண்டு லாரியை விடுவித்துள்ளனர்.
இந்நிலையில், லஞ்சம் பெற்றது தொடர்பான வீடியோ, போட்டோ ஆதாரங்களின் அடிப்படையில் மதுரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் அவர்கள் மூவர் மீதும் இன்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மதுரை இரண்டாவது தலைநகரா? அமைச்சர் கே.என் நேரு பதில்!
ஐ.டி. ரெய்டு: ஒப்பந்ததாரர் வீட்டில் ரூ.2.1 கோடி பறிமுதல்?