சிவகங்கையில் தனது தாடியை வைத்து 1700 கிலோ எடையுள்ள டாடா ஏஸ் வாகனத்தை இழுத்து செல்லையா திருச்செல்வம் சாதனை படைத்துள்ளார்.
இலங்கை யாழ்ப்பாணம் பகுதியை சேர்ந்தவர் 60 வயதான செல்லையா திருச்செல்வம். இவர் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் டாடா ஏஸ் வாகனத்தை தனது தாடியை கொண்டு இழுத்து சாதனை படைத்துள்ளார்.
1700 கிலோ எடையுள்ள டாடா ஏஸ் வாகனத்தின் முன்பகுதியில் கயிறை கட்டி அதனை செல்லையா திருச்செல்வம் தனது தாடியில் கட்டி சிங்கம்புணரி – கிருங்காக்கோட்டை விலக்கு சாலையில் இழுத்து தனது 5வது உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டார்.
அங்கிருந்து டாடா ஏஸ் வாகனத்தை தனது தாடியால் இழுத்துக்கொண்டு காரைக்குடி சாலை வழியாக 510 மீட்டர் தூரத்தை 15 நிமிடங்களில் கடந்து சோழன் உலக சாதனை படைத்தார்.
செல்லையா திருச்செல்வத்தின் இந்த சாதனையை பாராட்டி சோழன் உலக சாதனை சான்றிதழ், பதக்கம், நினைவு கேடயம். அடையாள அட்டை ஆகியவை வழங்கப்பட்டன.
60 வயதான செல்லையாவின் இந்த சாதனையை சாலையில் சென்ற பொதுமக்கள் வியந்து பார்த்து சென்றனர்.
செல்லையா தாடியால் டாடா ஏஸ் இழுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கழிவறையில் இருந்து வந்த விஷவாயு… அடுத்தடுத்து 3 பெண்கள் பலி : புதுச்சேரியில் அதிர்ச்சி!