குடியரசுத் தலைவர் காவல் பதக்கம்: தேர்வான தமிழக போலீசார்!

தமிழகம்

குடியரசு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 901 காவல்துறை அதிகாரிகளுக்கு காவல் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 140 பேருக்கு வீர தீர செயலுக்கான காவல் பதக்கம், 93 பேருக்குச் சிறப்புச் சேவைக்கான குடியரசுத் தலைவர் காவல் பதக்கம் மற்றும் 668 பேருக்குச் சிறந்த சேவைக்கான காவல் பதக்கம் வழங்கப்படுகிறது.

இவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த 3 காவல்துறை அதிகாரிகளுக்குக் குடியரசுத் தலைவர் காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐஜி தேன்மொழி சென்னை, செங்கல்பட்டு உதவி கண்காணிப்பாளர் பொன்ராமு, அரியலூர் உதவி கண்காணிப்பாளர் ரவி சேகரன் ஆகியோர் இவ்விருதைப் பெறுகிறார்கள்.

சிறந்த சேவைக்கான காவல்துறை பதக்கம் தமிழகத்தைச் சேர்ந்த 21 அதிகாரிகளுக்கு வழங்கப்படவுள்ளது.

பிரியா

ஆளுநரின் தேநீர் விருந்து: புறக்கணிக்கும் திமுக கூட்டணிக் கட்சிகள்!

இடைத்தேர்தல்: ஓபிஎஸ் அணிக்கு தனியரசு ஆதரவு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.