ஒரே மாதத்தில் இரண்டாவது முறை: தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைது!

தமிழகம்

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை இன்று (ஆகஸ்டு 22) கைது செய்து இருக்கிறது.

நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் சென்றனர்.

இலங்கை கடல் எல்லை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இன்று காலை அங்கு வந்த இலங்கை கடற்படை அதிகாரிகள் எல்லை தாண்டியதாகக் கூறி ஒரு விசைப்படகில் இருந்த 10 மீனவர்களை கைது செய்தனர்.

அவர்களது விசைப்படகையும் பறிமுதல் செய்தனர். கைது செய்த 10 மீனவர்களையும் திரிகோணமலை கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். 

இதேபோன்று கடந்த 10 ஆம் தேதியும் முல்லைத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் 9 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

அவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி இருந்தார்.

இந்தநிலையில் மீண்டும் 9 பேர் கைது செய்யப்பட்டு இருப்பது மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கலை.ரா

இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் 9 பேர் கைது!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.