மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நாடு முழுவதும் ஐபிஎஸ் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் தமிழ்நாட்டில் 14 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் 8 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழ்நாடுஅரசு இன்று (பிப்ரவரி 14) அரசாணை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஐஏஎஸ் வெளியிட்டுள்ள உத்தரவுப்படி பின்வரும் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் சிறப்புச் செயலராக இருந்த ஏ. சுகந்தி ஐ.ஏ.எஸ், தற்போது மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் துணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நில நிர்வாக இணை ஆணையராக இருந்த எஸ்.பி. அம்ரித் இடமாற்றம் செய்யப்பட்டு, தற்போது மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மற்றும் உள்துறை இணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் கூடுதல் ஆட்சியராக மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட அலுவலராக இருந்த பி. ரத்தினசாமி ஐ.ஏ.எஸ், தற்போது வணிகவரித்துறை இணை ஆணையராக (நிர்வாகம்) நியமிக்கப்பட்டுள்ளார்.
நாகர்கோவில் மாநகராட்சி இணை ஆணையராக இருந்த ஆனந்த் மோகன் ஐ.ஏ.எஸ், தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று இணை மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்தின் இணை நிர்வாக இயக்குநராக இருந்த வி.சரவணன் ஐ.ஏ.எஸ், திருச்சி மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு தொழில்துறை வழிகாட்டுதல் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு பணியகத்தின் நிர்வாக இயக்குனராக இருந்த நிஷாந்த் கிருஷ்ணா ஐ.ஏ.எஸ், தற்போது நாகர்கோவில் மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்தின் நிர்வாக இயக்குநராக இருந்த வி. ஜெயச்சந்திர பானு ரெட்டி ஐ.ஏ.எஸ், சென்னை பெருநகர மாநகராட்சி கூடுதல் ஆணையராக (சுகாதாரம்) நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை வர்த்தக வரி இணை ஆணையராக (உளவுத்துறை) இருந்த வீர்பிரதாப் சிங், ராமநாதபுரம் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மற்றும் திட்ட அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
நேற்று கட்சி தாவிய அசோக் சவான் : இன்று எம்.பி. சீட் கொடுத்த பாஜக
அமலாக்கத்துறை வழக்கில் ஆவணங்கள் திருத்தம்: செந்தில் பாலாஜி தரப்பு வாதம்!