முகச் சிதைவு நோய் பாதித்த சிறுமி: 8 மணி நேர அறுவை சிகிச்சை தொடங்கியது!

தமிழகம்

அரிய வகை முகச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட 9 வயது சிறுமி தானியாவிற்கு, ஜெர்மன் நாட்டு மருத்துவர்கள் தலைமையில் அதி நவீன அறுவைசிகிச்சை இன்று (ஆகஸ்ட் 23) நடைபெறுகிறது.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்த ஸ்ரீவாரி நகரைச் சேர்ந்தவர்கள் ஸ்டிபன்ராஜ்-சௌபாக்கியா தம்பதியினர். இவர்களின் மூத்த மகள் தானியா (9) அரசுப்பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகிறார்.

சிறுமிக்கு கடந்த 6 வருடங்களுக்கு முன்பே கன்னத்தில் கொப்பளம் போன்று சிறு வீக்கம் தென்பட்டுள்ளது.

இதற்காக தொடர்ந்து சிகிச்சை எடுத்தும் சிறுமிக்கு நோய் குணமாவதாகத் தெரியவில்லை.

இதையடுத்து தானியாவின் முகத்தின் வலது பக்கம் கொஞ்சம் கொஞ்சமாக சிதையத் தொடங்கியது.

சிறுமியின் பெற்றோர் கண்ணீர் மல்க வேண்டுகோள்!

சிறுமியின் முகம் பார்ப்பதற்கு பரிதாபமாக மாறிய நிலையில், உரிய சிகிச்சை அளிக்க முடியாமல், அவரது பெற்றோர் தவித்து வந்தனர்.

இந்த சூழலில் தங்களுடைய குழந்தைக்கு உதவும்படி முதல்வர் ஸ்டாலினுக்கு தானியாவின் பெற்றோர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்த வீடியோ சமூக வலைதளத்தில் பலராலும் பகிரப்பட்டது.

8 hours operation started

இதுகுறித்து தகவலறிந்த முதல்வர் ஸ்டாலின், கடந்த 17ம் தேதி சிறுமிக்கு உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து அரசு சார்பில் பூந்தமல்லி அருகே உள்ள தண்டலம் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிறுமி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதிநவீன சிகிச்சை!

அமைச்சர் நாசர் மருத்துவமனைக்கு சென்றும், முதல்வர் ஸ்டாலின் தொலைபேசி வாயிலாகவும் அடிக்கடி தொடர்பு கொண்டு தானியாவின் உடல்நலம் குறித்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் அரிய வகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஜெர்மன் நாட்டு மருத்துவ வல்லுநர்கள் 2 பேர் அடங்கிய 10 பேர் கொண்ட மருத்துவ குழுவினரால் அதி நவீன (Plastic Reconstructive Surgery with Advanced micro surgical and cranio facial techniques multiple stage of treatment) என்று சொல்லக்கூடிய உடல் micro surgical ஒட்டுறுப்பு சிகிச்சை தற்போது தொடங்கி உள்ளது.

இந்த சிகிச்சையானது 8 மணி நேரம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்டோபர் ஜெமா

சர்க்கரை நோய்: உணவு குறித்தான கட்டுக்கதைகளும்.. உண்மைகளும்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *