75 நாட்கள்… 75 கடற்கரைகள்… 7500 கிலோ மீட்டர்… விழிப்புணர்வு நிகழ்ச்சி!
76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு 75 நாட்கள், 75 கடற்கரைகளில், 7500 கிலோ மீட்டர் தூரத்திற்கு தூய்மைபடுத்தும் பணி இன்று (ஆகஸ்ட் 14) தொடங்கியது.
76 ஆவது சுதந்திர தின விழா நாளை (ஆகஸ்ட் 15) கொண்டாடப்பட உள்ள நிலையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதில் ஒரு பகுதியாக இன்று (ஆகஸ்ட் 14) கடற்கரைகளில் சுத்தம் செய்யும் பணிகள் சென்னையில் உள்ள பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் தொடங்கியது.
மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் மற்றும் ஆயுஷ் அமைச்சகம், அமைச்சர் ஸ்ரீ சர்பானந்தா சோனாவால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்வை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
மோனிஷா
10 நாட்களில் 1 கோடி தேசியக்கொடி விற்பனை!