கிச்சன் கீர்த்தனா: 7 ஸ்டார் தோசை

Published On:

| By Selvam

7 Star Dosa Recipe in Tamil

தோசைகளில் பல வகை தோசைகள் செய்யப்பட்டாலும் மிகவும் ஹெல்த்தியான தோசை இந்த 7 ஸ்டார் தோசை. சரிவிகிதமாக அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும் இது, கலோரி நிறைந்தது. வைட்டமின்கள், தாது உப்புகள் அதிகம் கிடைப்பதால் உடல் வலுப்பெறும்; ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

என்ன தேவை?

பச்சரிசி – ஒரு கப்
கம்பு, ரவை, கேழ்வரகு, ஜவ்வரிசி, உளுந்து, கோதுமை வறுத்து மாவாக்கியது – ஒரு கப்
சின்ன வெங்காயம் – அரை கப்
பச்சை மிளகாய், தக்காளி – தலா 4 (நறுக்கவும்)
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

பச்சரிசி மாவுடன் தானிய மாவைக் கலந்து, உப்பு சேர்த்து நீர் விட்டுக் கரைக்கவும். இதில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்துப் பெருங்காயத்தூள் போட்டுக் கலக்க வேண்டும். தோசைக் கல்லைச் சூடாக்கி எண்ணெய்விட்டு தோசை ஊற்றித் திருப்பிப் போட்டு, வெந்ததும் பரிமாறலாம்.

சாமை பால் பொங்கல்

ராகி சேமியா கிச்சடி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel