உதயச்சந்திரன், ககன் தீப் சிங் பேடிக்கு கூடுதல் பொறுப்பு!

தமிழகம்

தமிழகத்தில் 7 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக இருந்த ராகுல் நாத் தூத்துக்குடி ஆட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டு அவர் தொடந்து செங்கல்பட்டு ஆட்சியராகவே நீடிப்பார்.

சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடிக்கு சிறப்பு திட்ட செயலாக்கத்துறை கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

நிதித்துறை முதன்மை செயலாளர் உதயச்சந்திரனுக்கு தொல்லியல் துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத், பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பின் மேலாண் இயக்குநராக மாற்றம்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், கூட்டுறவு சங்க பதிவாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டது ரத்து செய்யப்பட்டு அவர் தொடந்து தூத்துக்குடி ஆட்சியராகவே நீடிப்பார்.

மாற்றுத்திறனாளிகள் நல மேலாண் இயக்குநராக கமல் கிஷோர் நியமனம்

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பு மேலாண் இயக்குநர் மற்றும் பால்வளத்துறை ஆணையர் சுப்பையன் கூட்டுறவுத்துறை சங்க பதிவாளராக நியமனம்

செல்வம்

மறைந்தார் ஜென்டில்மேன்: யார் இந்த சரத் பாபு

மாசெ வஹாப் தூக்கப்பட்டது ஏன்? நெல்லை திமுகவில் க்ரைம் பாலிடிக்ஸ்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
1
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *