தமிழ்நாட்டில் 7 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா நேற்று (அக்டோபர் 16) இரவு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
“வணிக வரித்துறை ஆணையராக ஜெகன் நாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் முதன்மை செயலாளராக அபூர்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலாளராக சமயமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
கூட்டுறவுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக கோபால் நியமிக்கப்பட்டுள்ளார்.
திட்டம் மற்றும் வளர்ச்சித் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக ரமேஷ் சந்த் மீனா நியமிக்கப்பட்டுள்ளார் .
அச்சு மற்றும் எழுது பொருள் துறை ஆணையராக சோபனா நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு கைத் திறன் தொழில்கள் வளர்ச்சி கழகத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக கவிதா ராமு நியமிக்கப்பட்டுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரியா
வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!
திருப்பதி: ஆன்லைன் முன்பதிவுக்கு புதிய முகவரி!
காஸா:’இண்டியா’ கூட்டணிக்கு ஒரு வேண்டுகோள்!
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன் கீர்த்தனா: கீரை சாதம்!