vairamuthu credicts about kalaingnar library

கலைஞர் நூலகத்தின் ஏழு தளங்கள்…. ஏழு கண்டங்கள்: வைரமுத்து

தமிழகம்

மதுரையில் இன்று (ஜூலை 15) திறக்கப்பட உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் ஏழு தளங்களும் ஏழு கண்டங்கள் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

மதுரை புதுநத்தம் சாலையில் ரூ.215 கோடி மதிப்பீட்டில், 7 தளங்கள், நவீன வசதிகளுடன் கலைஞர் நூற்றாண்டு நூலகம் உலகத்தரம் வாய்ந்த அளவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ரூ.215 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் திறப்பு விழா இன்று நடைபெற உள்ளது.

இந்த நூலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை 5 மணிக்கு திறந்து வைக்க உள்ளார். இதற்காக காலை 11.20 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை புறப்பட்டு செல்கிறார்.

திறப்பு விழாவில் அமைச்சர்கள் எ.வ.வேலு, பி.மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், எம்எல்ஏக்கள் கோ.தளபதி, புதூர் பூமிநாதன், மேயர் இந்திராணி பொன்வசந்த் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கின்றனர்.

கல்வி கண் திறந்த மேதை காமராஜர் பிறந்தநாளான இன்று பலரும் பயன்பெறும் வகையில் நூலகம் திறந்து வைக்கப்படுவது சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் ஏழு தளங்களும் ஏழு கண்டங்களுக்கு இட்டு செல்க என்று கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“மதுரையில் திறக்கப்பெறும் கலைஞர் நூற்றாண்டு நூலகம் கலைஞரின் மாட்சிக்கும் தளபதியின் ஆட்சிக்கும் வரலாற்று அடையாளமாகும்.

தமிழ் சாதியை அறிவுக் குடிமக்களாக்கி இந்த ஏழு தளங்களும் ஏழு கண்டங்களுக்கும் இட்டுச்செல்க என்று வாழ்த்துகிறோம்.

தமிழ்நாடு கர்வப்படும் காரணங்களுள் இதுவும் ஒன்று” என்று ட்விட்டரில் வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார்.

மோனிஷா

இந்தியா இன்னிங்ஸ் வெற்றி! : அஸ்வின் சுழலில் சுருண்டது வெஸ்ட் இண்டீஸ்

இரவு பாடசாலை திட்டம்: விஜய்யின் முடிவை வரவேற்ற அன்பில் மகேஷ்

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *