சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியரின் பாதுகாப்பிற்காக நிர்பயா திட்டத்தின் கீழ் 4.65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 636 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
பெருநகர சென்னை மாநகராட்சி கல்வித்துறையின் கீழ் 32 மேல்நிலைப்பள்ளிகள், 38 உயர்நிலைப்பள்ளிகள், 92 நடுநிலைப்பள்ளிகள், 119 தொடக்கப் பள்ளிகள் என மொத்தம் 281 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் படி சென்னை பள்ளிகளின் தரத்தை உயர்த்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறிப்பாக தனியார் பள்ளிகளுக்கு இணையாக மாநகராட்சி பள்ளிகளில் புதிய கட்டடங்கள், வள வகுப்பறைகள், ஆய்வகங்கள் விளையாட்டு மைதானங்கள், நவீன மேசைகள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதேபோன்று தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவு திட்டம், மாணவர்களுக்கு வண்ண சீருடைகள், மாநகராட்சி பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவ மாணவியருக்கு கல்வி ஊக்கத்தொகை, போன்ற பல்வேறு விதமான நலத்திட்டங்களும் வழங்கப்பட்டு ஏழை எளிய மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக மாநகராட்சி பள்ளியில் பயிலும் மாணவ மாணவியரின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்சமயம் நிர்பயா நிதியின் கீழ் மாணவ மாணவியரின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு மாநகராட்சியின் 29 மேல்நிலைப் பள்ளிகள் 37 உயர்நிலைப்பள்ளிகள் 90 நடுநிலைப்பள்ளிகள் மற்றும் மூன்று தொடக்கப்பள்ளிகள் என 151 பள்ளி வளாகங்களில் 4,66,61,705 ரூபாய் மதிப்பில் 636 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
கலை.ரா
கஞ்சா, மதுபோதை: இளம்பெண் செய்த அட்டூழியம்!
அதிமுக வழக்கு: எடப்பாடி தரப்பு வாதத்தை ஏற்று ஒத்திவைப்பு!