தமிழக உளவுத்துறையில் கிறிஸ்தவர்களின் ஆதிக்கமா?

Published On:

| By Prakash

உளவுத்துறையில் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த 60 சதவீதம் பேர் பணியில் இருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறிய குற்றச்சாட்டுக்கு உளவுத் துறையினரின் பதில் என்ன?

“உளவுத்துறையில் எஸ்.பி., டி.எஸ்.பி., ஏ.டி.எஸ்.பி. ஆகிய பணியிடங்களில் 60 சதவீதம் பேர், குறிப்பிட்ட சமுதாயத்தினர் (கிறிஸ்தவர்) மட்டுமே இருக்கிறார்கள்” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டி வருகிறார்.

குறிப்பாக ’சாணக்யா’ யூடியூப் சேனலில், அவர் அளித்த நேர்காணலின்போது, ”தமிழக உளவுத்துறையில் கிறிஸ்தவர்களின் ஆதிக்கம் அதிகம் இருக்கிறது.

இதன் காரணமாகவே உளவுத்துறை தோல்வியடைந்துவிட்டது. தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, உளவுத்துறை ஏடிஜிபிக்கு (டேவிட்சன் தேவாசீர்வாதம்) ஒரு அஜென்டாவை கொடுத்துவிட்டது.

அதன்படி, உளவுத்துறையில் கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்தவர்களையே முக்கிய பதவிகளில் அமர்த்தினார்கள். மேலும், தென் தமிழகத்தில் ஏதோ ஒன்றை ஊக்குவிப்பதற்காக, உளவுத்துறை ஏடிஜிபிக்கு ஒரு அஜென்டா ஒப்படைக்கப்பட்டது.

60% christians in intelligence: annamalai answer false

அவருக்கு கிறிஸ்தவ மிஷனரிகளிடம் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அதற்காக, குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களை உளவுத்துறையில் முக்கிய பதவிகளில் நியமித்தார்” எனப் பேசியிருந்தார்.

அண்ணாமலையின் இந்த கருத்து, தமிழக காவல் துறையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அண்ணாமலை குற்றச்சாட்டுகள் பற்றி தமிழக உளவுத்துறையினரிடம் மின்னம்பலம் செய்தியாளர் குழு விசாரித்தது. அப்போது, ”உளவுத்துறையில் எஸ்.பி., டி.எஸ்.பி., ஏ.டி.எஸ்.பி. ஆகிய மொத்தமுள்ள 61 பதவிகளில் 11 பேர் கிறிஸ்தவர்களாக இருக்கின்றனர்.

அப்படி என்றால் அந்த சமுதாயத்தைச் சேர்ந்த 18 சதவீதம் பேர்தான் உளவுத் துறை பணிகளில் இருக்கிறார்கள்” என்கின்றனர் புள்ளிவிவரமாக.

வணங்காமுடி

கோவை வழக்கு : அம்மாவின் அறிவுரை- சரணடைந்த சகோதரர்கள்!

செந்தில்பாலாஜி மீதான பணமோசடி வழக்கு : நீதிமன்றம் அதிரடி உத்தரவு!