தஞ்சாவூர் அருகே கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்ற 6 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் சிலுவைப்பட்டியை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 40 பேர் தஞ்சாவூர் அருகே உள்ள பூண்டி மாதா பேராலயத்திற்கு வந்து உள்ளனர்.
இன்று (அக்டோபர் 3) காலை, கும்பகோணம் அருகே திருக்காட்டுப்பள்ளியில் கொள்ளிடம் ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளனர்.

இதில் சார்லஸ், பிரவீன் ராஜ், பிரதீவ்ராஜ் ,தாவீது ,ஈஷாக், தெர்மஸ் ஆகியோர் ஆழமான பகுதிக்கு சென்றதுடன் நீரில் மூழ்கியிருக்கின்றனர்.
இதைப் பார்த்த மற்றவர்கள் சத்தம் போட்டவுடன் ஊர் மக்கள் அங்கு திரண்டனர். நீரில் மூழ்கியவர்களை காப்பாற்ற முயற்சித்தும் பலனில்லை.

இதையடுத்து தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆற்றில் இறங்கி தேடிய தீயணைப்பு வீரர்கள், சார்லஸ், பிரதீப் ராஜ் ஆகிய இருவரின் உடல்களை மீட்டனர். நீரில் மூழ்கிய மற்ற 4 பேரைத் தேடி வருகின்றனர்.
இவர்கள் அனைவரும் மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. தூத்துக்குடியில் இருந்து பூண்டி மாதா கோயிலுக்கு சாமி கும்பிட வந்தவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கலை.ரா