நள்ளிரவில் நடந்த கோர விபத்து… ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி!

தமிழகம்

சேலத்தில் நள்ளிரவு ஆம்னி பேருந்து மீது டிப்பர் லாரி மோதி ஏற்பட்ட கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மற்றும் பஸ் கிளீனர் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவரின் குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் சென்னையில் இன்று நடைபெற இருந்த மஞ்சள் நீராட்டு விழாவுக்கு தனியார் ஆம்னி பேருந்தில் செல்ல முன்பதிவு செய்திருந்தனர்.

அதன்படி நள்ளிரவு 12.24 மணிக்கு பெத்தநாயக்கன் பாளையத்திற்கு வந்த பேருந்து சாலையோரமாக நின்றுள்ளது.

இதனையடுத்து மஞ்சள் நீராட்டு விழாவுக்கு கொண்டு செல்லும் சீர்வரிசை பொருட்கள் மற்றும் உடைமைகளை திருநாவுக்கரசு மற்றும் அவரது குடும்பத்தினர் பேருந்தின் வலது பக்கமாக நின்று ஏற்றிக்கொண்டு இருந்தனர்.

அப்போது சேலத்தில் இருந்து ஆத்தூர் நோக்கி சென்ற டிப்பர் லாரி ஒன்று பேருந்தின் வலது பக்கத்தில் கண்இமைக்கும் நேரத்தில் பயங்கரமாக மோதி சிறிது தூரம் சென்றது.

இந்த விபத்தில் திருநாவுக்கரசு (வயது 65), ரவிக்குமார் (41), செந்தில்வேலன் (40), சுப்பிரமணி (40), தீபன் மற்றும் பஸ் கிளீனர் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் பேருந்து மீது மோதிய லாரியின் சக்கரத்தில் கிளீனரின் உடல் சிக்கி, சிறிது தூரம் இழுத்து சென்றதால் அந்த பகுதி ரத்தக்கறையாக காட்சி அளித்தது.

மேலும் விஜயா, பிரகாஷ், மாதேஸ்வரி 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

அவர்கள் அனைவரும் உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் விஜயா உயிரிழந்ததை தொடர்ந்து பலி என்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

விபத்து குறித்து தகவல் அறிந்த ஏத்தாப்பூர் மற்றும் வாழப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆம்னி பஸ் மீது டிப்பர் லாரி மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க..!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் – சாப்பிட்டதும் இனிப்பு சாப்பிடும் பழக்கம்… நல்லதா?

+1
0
+1
0
+1
2
+1
2
+1
0
+1
0
+1
2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *