ஐபிஎஸ் அதிகாரிகள்  6 பேர் இடமாற்றம்!

தமிழகம்

காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஆனி விஜயா உள்பட 6 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றி தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் பனீந்திர ரெட்டி இன்று (செப்டம்பர் 17) அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி,

காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த ஐ.ஜி ஏ.ஜி பாபு சென்னை தொழில்நுட்பத்துறையின் பயிற்சி பிரிவுக்கு ஐஜி யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோன்று காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த ஆனி விஜயா சென்னை காவலர் பயிற்சி  கூடுதல் ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். எஸ்பி செல்வகுமார் காத்திருப்போர் பட்டியலில் இருந்தார். அவர் தற்போது நாகை மாவட்ட கடலோர காவல் படை எஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு சீருடைப் பிரிவு தேர்வாணையத்தின் எஸ்பி ஆக இருந்த ராதாகிருஷ்ணன் சேலம் மாவட்டத்தின் தலைமையிடத்து துணை ஆணையர் என்ற புதிய பதவி உருவாக்கப்பட்டு அதற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

6 IPS officers transferred

தெற்கு மண்டல பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி யாக இருந்த விஜயகுமார் தமிழ்நாட்டின் சீருடை தேர்வாணையத்தின் எஸ்.பி ஆகவும் மாற்றப்பட்டிருக்கிறார்.

மதுரை மண்டல குடிமை வழங்கல் துறையின் எஸ்.பி ஆக இருந்த எம். பாஸ்கரன் திருப்பூர் மாநகர காவல் தலைமையிடத்து துணை ஆணையர் என்ற புதிய பதவியில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கலை.ரா

அரசுப் பயிற்சியில் 9 பேர் ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகளுக்குத் தேர்வு!

பரவும் காய்ச்சல்: பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமா?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0