புதுச்சேரியில் 6 ஐபிஎஸ் உயரதிகாரிகளை இடமாற்றம் செய்து துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக புதுச்சேரி அரசு இன்று (அக்டோபர் 29) அரசாணை வெளியிட்டுள்ளது.
அதன்படி, டெல்லியில் இருந்து புதுச்சேரிக்கு இடமாற்றம் செய்யப்பட்ட ஆர். சத்தியசுந்தரம் ஐபிஎஸ், புதுச்சேரி சட்டம் ஒழுங்கு டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுச்சேரி டிஐஜி பிரிஜேந்திர குமார் யாதவ் ஐபிஎஸ், ஆயுதப்படை காவல் மற்றும் பயிற்சி டிஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
புதுச்சேரி சட்டம் & ஒழுங்கு முதுநிலை டிஐஜியாக பணியாற்றி வந்த நர்ரா சைதன்யா ஐபிஎஸ், புதுச்சேரி குற்றம் மற்றும் புலனாய்வு முதுநிலை ஐஜியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் கமாண்டன்டாக (IRBn) கூடுதல் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி குற்றம் & புலனாய்வு முதுநிலை ஐஜியான ஆர். கலைவாணன் ஐபிஎஸ், சட்டம் மற்றும் ஒழுங்கு முதுநிலை ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுச்சேரி கிழக்கு ஐஜி எம்.வி.என்.வி.லட்சுமி சௌஜன்யா ஐபிஎஸ், காரைக்கால் முதுநிலை ஐஜியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
புதுச்சேரி கிழக்கு ஐஜியாக இஷா சிங் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
”விஜய்யின் சேவை… கண்டிப்பாக தேவை” : துரை வைகோ
கேபினெட் மீட்டிங்கை பதுங்கி பதுங்கி நடத்திய இஸ்ரேல்… ஈரான் மீது இவ்வளவு அச்சமா?