தமிழகத்தில் 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்குத் தடை விதித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
சமீபத்தில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் குடும்ப மற்றும் சுகாதார நலத்துறை அமைச்சர் பிரவீன் பவார், “கடந்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் 7.20 லட்சம் பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
தமிழகத்தில் 77 ஆயிரத்துக்கு அதிகமானோர் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்தனர்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தமிழகத்தில் தற்கொலை வாய்ப்பை தடுக்கும் வகையில் 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்குத் தடை விதித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மோனோ குரோட்டோபாஸ், ப்ரொ பெனோபஸ், அசிப்பேட், ப்ரொ பெனோபஸ் + சைபர்மெத்ரின், க்ளோரோ பைரிபோஸ் + சைபர்மெத்ரின், க்ளோரோ பைரிபோஸ் உள்ளிட்ட மருந்துகளுக்கு 60 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மஞ்சள் பாஸ்பரஸ் என்ற ரடோல் பூச்சிக்கொல்லி மருந்திற்கு நிரந்தர தடையும் விதித்துள்ளது.
பிரியா
மீண்டும் ரசிகர்களை சந்திக்கும் விஜய்
காட்டாற்று வெள்ளம்: இழுத்து செல்லப்பட்ட பெண்கள்!