சென்னையில் 6 விமானம் ரத்து: 10 விமானம் தாமதம்!

தமிழகம்

வங்கக் கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் தமிழகத்தை நெருங்கிக் கொண்டிருப்பதால், சென்னையில் 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மாண்டஸ் புயல் தமிழகத்தை நெருங்கிக் கொண்டு இருப்பதன் காரணமாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று காலையில் இருந்து சாரல் மழை பெய்யத் தொடங்கியது. அதோடு  காற்றின் வேகம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கிறது.

இந்த மோசமான வானிலை காரணமாக சென்னையில் இருந்து, இன்று(டிசம்பர் 8) பகல் 12மணி தூத்துக்குடி செல்லும்  விமானமும், பிற்பகல் 2:25மணிக்கு சீரடி செல்லும் விமானமும் ரத்து செய்யப்பட்டன.

விமானம் தரையிறங்குவதில் சிரமம் இருப்பதால், தூத்துக்குடியில் இருந்து மாலை3:30 மணிக்கு சென்னை வரும் விமானமும், சீரடியில் இருந்து மாலை 6:30மணிக்கு சென்னை வரும் விமானமும் ரத்து செய்யப்பட்டன.

மேலும் சென்னை விமான நிலையத்தில் தூத்துக்குடி மற்றும் சீரடி உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லும் 4விமானங்கள் ரத்தாகி உள்ளன.

அதோடு சென்னையில் இருந்து மும்பை, மதுரை, தூத்துக்குடி, ஹுப்ளி, கண்ணூர், கோலாலம்பூர், சிங்கப்பூர், இலங்கை, டாக்கா ஆகிய இடங்களுக்கு புறப்பட்டு செல்லும் 11விமானங்கள் தாமதமாக புறப்பட்டு செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து இன்று இரவு 7:10மணிக்கு மங்களூர் செல்ல வேண்டிய விமானமும்,

அதைப்போல் மங்களூரில் இருந்து இன்று இரவு 11:05மணிக்கு சென்னை வந்து சேர வேண்டிய விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஏற்கனவே சென்னை விமான நிலையத்தில், மாண்டஸ் புயலை சமாளிக்கும் விதத்தில், பாதுகாப்பு ஏற்பாடுகள் உட்பட அனைத்து ஏற்பாடுகளையும்  செய்தது குறித்து, உயர் மட்ட ஆலோசனைக் கூட்டம் நேற்று(டிசம்பர் 7) மாலை நடந்தது.

அந்த கூட்டத்தில் விமான பயணிகள், விமானங்கள்  பாதுகாப்பதற்காக, அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்க முடிவு செய்யப்பட்டது.

அதை அந்த அடிப்படையில் தற்போது இந்த விமானங்கள் ரத்து, விமானங்கள் தாமதம் ஆகியவைகள் இருக்கின்றன.

விமானங்கள் ரத்து, தாமதம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கலை.ரா

மாண்டஸ் புயல்: அதிமுக எடுத்த முடிவு!

சென்னை மக்களே உஷார்: முக்கிய அறிவிப்பு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *