6 died in sankagiri accident

அதிகாலையில் நடந்த கோர விபத்து: 6 பேர் பலி!

தமிழகம்

சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது இன்று (செப்டம்பர் 6) அதிகாலை ஆம்னி வேன் மோதியதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை, ஈங்கூர், குட்டபாளையம் பகுதியைத் சேர்ந்தவர் கருப்பண்ணன் மகன் பழனிசாமி, இவரது மனைவி பாப்பாத்தி, இவர்களது மகள் பிரியா.

பிரியாவுக்கும் சேலம், கொண்டாலம்பட்டி, காமராஜர் காலனி, மேட்டுத்தெரு பகுதியைச் சேர்ந்த சேலம் மாநகராட்சி ஒட்டுநர் காளியப்பன் மகன் ராஜதுரைக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு சஞ்சனா என்ற பெண் குழந்தை உள்ளது.

நேற்று பழனிசாமி குடும்பத்தினர் சேலத்தில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றுவிட்டு மீண்டும் மகள் மற்றும் பேத்தியுடன் சொந்த ஊருக்கு திரும்பி வந்துகொண்டிருந்தனர்.

அப்போது, சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த சின்னாகவுண்டனூர் நான்கு ரோடு பகுதியில் செல்லும் சேலம் – கோவை தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறத்தில் ஆம்னி வேன் மோதியது.

இந்த விபத்தில் பழனிசாமி (52), பாப்பாத்தி (40), ஆறுமுகம் (50), மஞ்சுளா (21), செல்வராஜீ (55), சஞ்சனா(1) உள்ளிட்ட 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

வேன் ஒட்டுநர் மற்றும் பிரியா ஆகிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

அப்போது இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த எடப்பாடி காவல் ஆய்வாளர் பி.சந்திரலேகா, சங்ககிரி காவல் துணை கண்காணிப்பாளர் சி.ராஜா ஆகியோர் காயமடைந்தவர்களை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவலறிந்து வந்த சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏ.கே.அருண்கபிலன் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டார்.

சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) தணிகாசலம், வட்டாட்சியர் கே.அறிவுடைநம்பி, மண்டல துணை வட்டாட்சியர் ரமேஷ், வருவாய் ஆய்வாளர் கீதா, கிராம நிர்வாக அலுவலர்கள் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.

மனதை பதைபதைக்க வைக்கும் இந்த கோர விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

அதிகாலை நடந்த இந்த கோர விபத்தில் ஆம்னி வேனில் பயணம் செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மோனிஷா

உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி: யார் இந்த சாமியார் பரமஹன்ச ஆச்சார்யா?

இன்று விற்பனைக்கு வரும் ‘மோட்டோ ஜி54 5ஜி’ ஸ்மார்ட்போன்!

+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *