மாதம் முழுதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்? இதை கவனிங்க…

Published On:

| By christopher

6 Days Bank Strike In December 2023

வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தம் மற்றும் வங்கி விடுமுறைகள் காரணமாக டிசம்பர் மாதத்தில் வங்கிகள் 24 நாட்கள் செயல்படாத நிலை ஏற்பட்டுள்ளது. 6 Days Bank Strike In December 2023

வங்கி ஊழியர்களின் சங்கங்கள், டிசம்பர் மாதம் ஆறு நாட்கள் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. ஆனால், அனைத்து வங்கி ஊழியர்களும் ஒரே நேரத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் (AIBEA) ஆறு நாள்கள் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது. அதன்படி, டிசம்பர் 4ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரையும் மற்றும் டிசம்பர் 11ஆம் தேதியும் வேலை நிறுத்தம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அனைத்து வங்கிகளிலும் போதுமான ஆள்சேர்ப்பு கோரியும் மற்றும் நிரந்தர பணியிடங்களுக்கான வேலைகளை மூன்றாம் நிறுவனத்துக்குக் கொடுப்பதை எதிர்த்தும் இந்த வேலை நிறுத்தம் நடைபெறவுள்ளது.

அதன்படி  டிசம்பர் 4: பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB), பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி மற்றும் பாரத ஸ்டேட் வங்கி (SBI) ஆகியவற்றில் அகில இந்திய வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் நடைபெறும்.

டிசம்பர் 5: பாங்க் ஆஃப் பரோடா மற்றும் பேங்க் ஆஃப் இந்தியா வங்கிகளில் அகில இந்திய வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தம் நடைபெறும்.

டிசம்பர் 6: கனரா வங்கி மற்றும் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கிகளில் அகில இந்திய வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தம் நடைபெறும்.

டிசம்பர் 7: இந்தியன் வங்கி மற்றும் யூகோ வங்கியில் அகில இந்திய வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தம் நடைபெறும்.

டிசம்பர் 8: யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் பேங்க் ஆஃப் மகாராஷ்டிராவில் அகில இந்திய வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் நடைபெறும்.

டிசம்பர் 11: அனைத்து தனியார் வங்கிகளிலும் அகில இந்திய வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் நடைபெறும்.

இதுகுறித்து, அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கப் பொதுச் செயலாளர் சி.எச். வெங்கடாசலம் அவரது எக்ஸ் பக்கத்தில் 2019 முதல் 2023 வரை வேலை வாய்ப்பின்மை கணிசமாக உயர்ந்துள்ளது என்று தெரிவித்துள்ளார். அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் அறிவிப்பின்படி, அரசு மற்றும் தனியார் வங்கிகளின் ஊழியர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் பங்கேற்பார்கள் எனத் தெரிவித்துள்ளது.

மேலும், ரிசர்வ் வங்கியின் பட்டியலின்படி, டிசம்பர் மாதத்தில் வார இறுதி நாட்களின் விடுமுறை மட்டும் 7 நாள்கள் ஆகும். இதனால் நாடு முழுவதும் டிசம்பர் மாதத்தில் மட்டும் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தம், பண்டிகை விடுமுறைகள், வார இறுதி நாட்கள் விடுமுறை என 24 நாட்கள் வரை செயல்படாத நிலை ஏற்பட்டுள்ளது.  ஆனால்,அந்தந்த மாநிலங்களில் கொண்டாடப்படும் பண்டிகைகள் மற்றும் மாநிலங்களில் அறிவிக்கப்படும் விடுமுறை நாட்களுக்கு ஏற்றவாறு வங்கிகள் செயல்படும்.

வங்கி ஊழியர்களின் சங்கங்கள் அறிவித்துள்ள வேலை நிறுத்தம் காரணமாக பல வங்கிகள் செயல்படாது என்றாலும், செல்போன் மற்றும் இணைய வழி செயல்பாடுகள் மூலம் வங்கிச் சேவைகள் தடையின்றி செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 6 Days Bank Strike In December 2023

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

WorldCupFinal2023: எங்கே தொடங்கியது இந்தியாவின் வீழ்ச்சி?… கேப்டனாக ரோஹித் செய்த மாபெரும் தவறு இதுதான்!

பியூட்டி டிப்ஸ்: கூந்தலை அயர்ன் செய்வது அழகானதா, ஆபத்தானதா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel