தீபாவளிக்குள் 5G சேவை!

தமிழகம்

சென்னை உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில் தீபாவளிக்குள் ஜியோ 5G சேவையை தொடங்க உள்ளதாக முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் 45வது ஆண்டு பொதுக் கூட்டம் இன்று(ஆகஸ்ட் 29) நடைபெற்றது.

காணொலி வாயிலாக நடைபெற்றக் கூட்டத்தில் கலந்து கொண்ட அதன் தலைவர் முகேஷ் அம்பானி 5G சேவையை தொடங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.

அப்போது பேசிய அவர், “பான்-இந்தியா 5G நெட்வொர்க்கிற்கு, ரூ.2 லட்சம் கோடி முதலீடு செய்துள்ளோம். ரிலையன்ஸ் ஜியோ உலகின் அதிவேக 5G வெளியீட்டு திட்டத்தை தயாரித்துள்ளது.

தீபாவளிக்குள் 5G சேவையை தொடங்க இருக்கிறோம். முதல்கட்டமாக நாட்டின் முக்கிய நகரங்களான சென்னை, டெல்லி, கொல்கத்தா, மும்பை உள்ளிட்ட இடங்களில் 5G சேவை வழங்கப்படும்.

டிசம்பர் 2023க்குள், இந்தியாவின் ஒவ்வொரு நகரத்திற்கும் 5G சேவையை வழங்குவோம்” என்று தெரிவித்தார்.

அனைத்து தரப்பு மக்களுக்கும் குறைவான விலையில் உயர்ந்த தரத்துடன் கூடிய இன்டர்நெட் சேவையை வழங்குவதே 5G சேவையின் நோக்கம்.

இந்தியாவின் தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு, உலகளாவிய சந்தைகளுக்கு டிஜிட்டல் தீர்வுகளை வழங்குவதில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்.

உலகின் மிகப்பெரிய மற்றும் மேம்பட்ட 5G  நெட்வொர்க்காக ஜியோ இருக்கும். எங்களது 4G நெட்வொர்க்கில் இருந்து முற்றிலும் வேறுபட்டதாக 5G சேவை இருக்கும்” என்று முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

கலை.ரா

அக்டோபர் 12ஆம் தேதிக்குள் 5ஜி சேவை: ஒன்றிய அமைச்சர்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *